மேலும் செய்திகள்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அநீதி: சொல்கிறார் ராகுல்
1 hour(s) ago | 1
சாலை கட்டுமானத்துக்கு திடக்கழிவுகள் பயன்பாடு: கட்கரி தகவல்
1 hour(s) ago | 1
பெங்களூரு: 'ஐ.டி.பி.எல்., ரோட்டில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்' என்று பாதசாரிகள், மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பெங்களூரு ஐ.டி.பி.எல்., மெயின் ரோட்டில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. இதனால் அந்த சாலை எந்த நேரமும் பரபரப்பாகவே இருக்கும். இந்நிலையில் பையப்பனஹள்ளியில் இருந்து ஒயிட்பீல்டு வரை, மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்ட பின்னர், ஐ.டி.பி.எல்., ரோட்டிற்கு செல்பவர்கள், கருடாச்சார்பாளையா மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோக்களில் செல்கின்றனர். இதனால், அந்த சாலையில் மேலும் போக்குவரத்து அதிகரித்துள்ளது. வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டே இருப்பதால், பாதசாரிகளுக்கு, சாலையை கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பாதசாரிகள் கையை காட்டி சாலையை கடந்தாலும், வாகன ஓட்டிகள் மெதுவாக வருவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேகமாக வரும் பைக்குகள் மோதி, ஒரு சில பாதசாரிகள் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், 'ஐ.டி.பி.எல்., சாலையில் முக்கியமான இடங்களில், நடை மேம்பாலம் கட்ட வேண்டும்' என்று, மாநகராட்சிக்கு பாதசாரிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
1 hour(s) ago | 1
1 hour(s) ago | 1