உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண தாகத்திற்கு முடிவே இல்லையா?: ஜெகன்மோகனுக்கு தெலுங்கு தேசம் கேள்வி

பண தாகத்திற்கு முடிவே இல்லையா?: ஜெகன்மோகனுக்கு தெலுங்கு தேசம் கேள்வி

அமராவதி: உங்கள் பண தாகத்திற்கு முடிவே இல்லையா? என ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனுக்கு தெலுங்கு தேசம் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அனைத்து மாவட்டங்களிலும் கட்சி அலுவலகம் கட்ட அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. விசாகப்படினம் மாவட்டத்தில் 2 ஏக்கர் நிலம் 2 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெறப்பட்டு, உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆந்திர கல்வி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i3jfakre&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் கூறியிருப்பதாவது: ஜெகன் ஆந்திர மாநிலம் என்ன உங்க தாத்தா ராஜா ரெட்டிக்கு சொந்தமானதா?. 26 மாவட்டங்களில் 42 ஏக்கர் நிலம் குத்தகைக்கு ஜெகன் மோகன் வாங்கி உள்ளார். மக்கள் இடம் பணத்தை திருடி ரூ.500 கோடிக்கு அரண்மனை கட்டியுள்ளீர்கள். இந்த பணத்தை வைத்து 25 ஆயிரம் ஏழைகளுக்கு வீடு கட்டி தரலாம். உங்கள் பண தாகத்திற்கு முடிவே இல்லையா?. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்புசாமி
ஜூன் 24, 2024 08:44

இவிங்க ஒழுங்கா இருந்திருந்தால் பத்து வருஷம் வனவாசமே வந்திருக்காதே? சந்திரபாபுவுக்கு 3000 கோடி சொத்து இருக்காமே... எல்லாத்தையும்.குடுத்துரப்.போறாரா?


Svs Yaadum oore
ஜூன் 23, 2024 17:52

திராவிடனுங்க பண தாகத்திற்கு முடிவே கிடையாது .....ஆனால் தமிழ் நாட்டில் உள்ள எல்லா திராவிடணுங்கலும் அவர்கள் ஓங்கோல் என்று சொல்லாமல் நாங்கள் திராவிடனுங்க என்று முகமூடி போட்டுக்கொள்வார்கள் ....இங்குள்ள ட்ராவிடனுங்க எல்லாம் தமிழர்களே கிடையாது ....


Svs Yaadum oore
ஜூன் 23, 2024 17:47

ஆந்திர மாநிலம் என்ன உங்க தாத்தா ராஜா ரெட்டிக்கு சொந்தமானதா? என்று கேள்வி கேட்கறாரு ??....இது ரொம்ப நல்ல கேள்வி.....


மேலும் செய்திகள்