உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யு-டர்ன் அடித்தது காங்கிரஸ் தான்... சொன்னீங்களே, செய்தீர்களா? திருப்பிக்கேட்கிறது பா.ஜ.,

யு-டர்ன் அடித்தது காங்கிரஸ் தான்... சொன்னீங்களே, செய்தீர்களா? திருப்பிக்கேட்கிறது பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்தாது ஏன்? என்று பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.

ஓய்வூதியம்

கடந்த இரு தினங்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஓய்வூதிய திட்டமானது, மத்திய அரசு ஊழியராக, குறைந்தபட்சம் 10 ஆண்டு பணியாற்றியவர்கள் தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது. 10 ஆண்டு பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விமர்சனம்

மத்திய அரசின் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது, மோடி அரசின் பல 'யு டர்ன்'களை குறிப்பிடுவதாகவும், இன்டெக்சேசன் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு, வக்பு மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதா வாபஸ், லேட்ரல் என்ட்ரி வாபஸ், இப்போது ஒருமித்த ஓய்வூதியம் என அடுத்தடுத்து மத்திய அரசு தன் முடிவுகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

யு-டர்ன்

இந்த நிலையில், கார்கேவின் இந்த பேச்சு குறித்து பா.ஜ., மூத்த தலைவர் ரவி ஷங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்து விட்டு, அதனை நிறைவேற்றாமல், காங்கிரஸ் தற்போது யு-டர்ன் அடித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது.

நிறுத்துங்க

மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் பிரதமர் மோடி, மிகவும் கவனமாக முடிவு எடுப்பார். பிரியங்கா தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை, ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும். வாக்குறுதிகளை கொடுத்து விட்டு, அதனை நிறைவேற்றாமல் ராகுல் தற்போது மழுப்பி வருகிறார். இதுபோன்று செய்வதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

M Ramachandran
ஆக 26, 2024 10:15

சோனியா குடும்பத்தினரை திருப்தி படுத்த யோசிக்காமல் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்து இப்படி பேதி ஆகும்படி ஆயிடுச்சே கார்கே ஐயா


M Ramachandran
ஆக 26, 2024 10:04

மல்லிகார்ஜுன கார்கே வேலை சோனியா குடும்பத்தினர் பேசு அதற்க்கு பெரிய ஜால்ரா வைத்து கொண்டு பல மாக வும் வேகமாகவும் தட்ட வேண்டிய சோலி அவ்வளவு தான் அவருக்கு சுதந்திரம் ராகுல் கூருகிறார் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கட்டியெழுப்புதற்கான காரணியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எதிர்காலத்தில் பணப்பரிவர்த்தனையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, என அவர் தெரிவித்துள்ளார்.டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கட்டியெழுப்புதற்கான காரணியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எதிர்காலத்தில் பணப்பரிவர்த்தனையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, என அவர் தெரிவித்துள்ளார்.


sreenivas seenu
ஆக 26, 2024 09:49

வார்த்தையில் கவனம் அதிமுக்கியம்...நூறு சீட் வாங்கமுடியாதவர் ...வாய் பொத்தி அடங்குவதே ஒரே வழி..


Sampath Kumar
ஆக 26, 2024 09:05

பிஜேபி என்ற இந்த அராஜக அற்றோலியம் நிறைந்த ஏமாற்று புத்திகொண்டகடவுள் பெயரால் ஏமாற்றி பொய் மட்டுமே துணையாக கொண்டு பிழைப்பு அடைத்தும் இந்த மத வெறியர்கள் தான் இந்த மாதிரி பேசுவான் எந்த பிரச்சனை என்றால் காங்கிரஸ் கட்சியி சாடுவது தான் வாடிக்கை நீ என்ன செய்தல் என்றால் ஒரு வெண்ணையும் இல்லை ப்புறம் ஏத்துக்கு நீ எல்லாம் ஏதற்கு அரசு நடத்துகிற மூடிக்கிட்டு போக்கவேண்டயது தானே


Dharmavaan
ஆக 26, 2024 09:53

காங்கிரஸ் ஒரு பச்சோந்தி என்றால் உனக்கு ஏன் வலிக்கிறது


ஆரூர் ரங்
ஆக 26, 2024 10:17

உமது காமெடிக்கு ரசிகரானவர்கள் ஏராளம். உங்களது தமிழாசிரியர்களது பெயர்களைப் பதிவிட்டு பெருமைப்படுத்தவும். எல்லாம் சமச்சீரா?


Duruvesan
ஆக 26, 2024 08:29

பாஸ் கடாக்கட் மாசம் 8500 எல்லோர் அக்கௌன்ட்லயும் போட்டுட்டாங்க கர்நாடக ஹிமாச்சல் தெலுங்கானால. அதானி ப்ராஜெக்ட்ஸ் எல்லாம் தடை பண்ணிட்டாங்க


rajan
ஆக 26, 2024 08:20

பதினைந்து லட்சம் கொடுப்பேன் என்று மோடி சொன்ன 2014 தேர்தல் வாக்குறுதி எங்கே வருடத்திற்கு இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்புகள் என்று மோடி சொன்ன 2014 தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று இன்னும் பல வாக்குறுதிகளை மோடி ஏன் நிறைவேற்றவில்லை


Duruvesan
ஆக 26, 2024 09:06

மோடி எதுவும் கொடுக்கல, உனக்கு எல்லாம் வேணும்னா விடியலுக்கு ஓட்டு போடு


G Mahalingam
ஆக 26, 2024 09:06

15 லட்சம் கொடுப்பேன் என்று பாஜாக தேர்தல் வாக்குறுதியில் இல்லை. இருந்தால் ஆதரத்தை காட்டவும்.


அப்புசாமி
ஆக 26, 2024 08:17

ரெண்டும் வெட்கங்கெட்டதுங்க... நீ ஒழுங்கான்னு கேட்டா நீ ஒழுங்கான்னு திருப்பி கேக்குறாங்க.


A Viswanathan
ஆக 26, 2024 07:55

கார்கே சொல்வதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துகொள்ள வேண்டாம்.


ديفيد رافائيل
ஆக 26, 2024 07:52

இப்படியே ஒருத்தன ஒருத்தன் குறை சொல்லிட்டே தான் இருப்பானுங்க போல. ஒருத்தனும் ஒன்றுமே பண்ண மாட்டான்.


Duruvesan
ஆக 26, 2024 09:07

எவனும் உனக்கு எல்லாமே இலவசம்னு குடுக்க மாட்டான், விடியலை தவிர


அரசு
ஆக 26, 2024 07:52

மறுபடியும் மறுபடியும் பழைய கதையை பேசி என்ன புண்ணியம்? கீழே விழுந்தேன் ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை