மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13
பெலகாவி: லோக்சபா தேர்தலை ஒட்டி, தொடர்ந்து ஒன்றரை மாதங்களாக பிரசாரத்தில் ஈடுபட்ட பின், பெலகாவியில் சம்பந்தியும், பா.ஜ., - எம்.பி., லட்சுமி அங்காடி வீட்டில் ஜெகதீஷ் ஷெட்டர் ஓய்வில் இருக்கிறார்.அவர் நேற்று அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலை ஒட்டி, கடந்த மார்ச் 27ம் தேதி பெலகாவிக்கு வந்தேன். தொகுதி முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்கள் ஆதரவு பெற்றேன்.லோக்சபா தேர்தல் என்பது மத்திய அரசுடன் தொடர்புடையது. மோடி மீண்டும் பிரதமராவது உறுதி. மாநிலத்தின் வாக்குறுதித் திட்டங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பா.ஜ., 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி.தேர்தல் சமயத்தில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு எதிர்க்கட்சியினர் பணம் கொடுத்துள்ளனர். இதனால் மக்கள் மனம் மாறிவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால், ஓட்டுப்பதிவு சதவீதத்தை பார்த்தபோது, மக்கள் மோடிக்கு ஆதரவாக இருப்பது தெரிகிறது.அரசியல் என்பது தற்போது முதலீடு செய்யும் வியாபாரமாக மாறிவிட்டது. பணம் கொடுத்து மக்களை அடிமையாக்கிவிட்டால் அரசியல் செய்யலாம் என நினைத்து உள்ளனர்.பெலகாவி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளிலும் கட்சி தொண்டர்களுக்கு டீ, ஸ்நாக்ஸ் உட்பட சிறிய அளவில் மட்டுமே செலவாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago | 5
6 hour(s) ago | 1
8 hour(s) ago | 13