உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெய்சங்கர், 61 நாடுகளின் துாதர்கள் காஜிரங்கா பூங்காவை சுற்றி பார்த்தனர்

ஜெய்சங்கர், 61 நாடுகளின் துாதர்கள் காஜிரங்கா பூங்காவை சுற்றி பார்த்தனர்

குவஹாத்தி : அசாமில் நடக்கும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கும் 61 நாடுகளின் துாதர்கள், நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் காஜிரங்கா தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்தனர்.வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது. இங்கு 'அட்வான்டேஜ் அசாம் 2.0' எனப்படும் உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டாளர் மாநாடு இன்று துவங்குகிறது. இதை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார்.இதில் பங்கேற்பதற்காக, இந்தியாவுக்கான பல நாடுகளின் துாதர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களை, காஜிரங்காவில் உள்ள புகழ்பெற்ற தேசிய பூங்காவுக்கு, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அழைத்து சென்றார்.ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் அதிகம் உள்ள இந்த பூங்காவில் முதலில் யானையின் மீது சவாரி செய்து, அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் 61 நாடுகளின் துாதர்கள் சுற்றி பார்த்தனர். அதைத் தொடர்ந்து, ஜீப்பில் சுற்றி வந்தனர்.யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ள இயற்கை எழில் சூழ்ந்த பூங்காவில், அவர்கள் சுற்றி வந்து ரசித்தனர். பின், யானைகளுக்கு உணவு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை