| ADDED : மே 10, 2024 05:20 AM
மல்லத்தஹள்ளி: பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில், பெங்களூரு மல்லத்தஹள்ளி ஜெ.எஸ்., --- பி.யு., கல்லுாரி மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பெங்களூரு மல்லத்தஹள்ளியில், ஜெ.எஸ்., - பி.யு., கல்லுாரி இயங்கி வருகிறது. சமீபத்தில் வெளியான பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகளில், இக்கல்லுாரி மாணவர்கள் அசத்தி உள்ளனர்.மொத்தம் 486 மாணவ - மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். இதில், 28 பேர் மாநில அளவில் ரேங்க் பெற்றனர். 85 சதவீதத்துக்கு மேல் 210 பேரும்; முதல் வகுப்பில் 180 பேரும் அடங்குவர்.மாணவி கீர்த்தனா 99 சதவீதம் எடுத்து முதலிடமும்; ருடு பட், 98.1 சதவீதம் எடுத்து இரண்டாம் இடமும்; ரச்சனா கோட்டியா, 98 சதவீதம் எடுத்து மூன்றாம் இடமும்; ரம்யா 97.8 சதவீதம் எடுத்து நான்காம் இடமும் பிடித்தனர்.மோனிகா, 97.8 சதவீதம் எடுத்து ஐந்தாம் இடமும்; சேத்தன், 97.8 சதவீதம் எடுத்து ஆறாவது இடமும்; திஷா, 97.3 சதவீதம் எடுத்து ஏழாவது இடமும் பிடித்துள்ளனர். இதில், மாணவி கீர்த்தனா அறிவியல் பிரிவில், மாநில அளவில் 5வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.அனைத்து மாணவர்களுக்கும் கல்லுாரி முதல்வர் என்.கே.விஜயலட்சுமி, தலைவர் எஸ்.ஜெயராம்ஷெட்டி பாராட்டு தெரிவித்தனர்.