உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணை நிரம்பியது; இனி எல்லா தண்ணீரும் தமிழகத்துக்கே!

கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணை நிரம்பியது; இனி எல்லா தண்ணீரும் தமிழகத்துக்கே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாண்டியா,காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால், இரண்டு ஆண்டுகளுக்கு பின் கே.ஆர்.எஸ்., அணை நிரம்பியது. இனி, அணைக்கு வரும் நீர் முழுதும் தமிழகத்துக்கே திறக்கப்படும்.கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா கண்ணம்பாடி கிராமத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே கே.ஆர்.எஸ்., அணை உள்ளது. இந்த அணை தான் கர்நாடகா, தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்குகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், அணை நிரம்பவில்லை.நடப்பாண்டு ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை துவங்கியதும், கே.ஆர்.எஸ்., அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், 49.452 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம், நேற்று இரவு 8:00 மணி நிலவரப்படி முழு கொள்ளளவை எட்டியது.அணைக்கு வினாடிக்கு 41,099 கன அடி தண்ணீர் வந்தது. அணைக்கு வந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. 2022, 2023ல் அணை முழுதும் நிரம்பவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து அணை நிரம்பி இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.கர்நாடகாவின் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டதால், இனி வரும் ஒட்டுமொத்த தண்ணீரும் தமிழகத்துக்கே திறந்து விடப்படும். இதனால், மேட்டூர் அணையும் விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Elangovan
ஜூலை 26, 2024 06:10

வரும் தண்ணிய ஒழுங்காக பயன் ஒழுங்காக பயன்படுத்தட்டும்


Easwar Kamal
ஜூலை 25, 2024 21:06

எல்லா தண்ணீரும் தமிழகத்துக்கே.வந்த தண்ணீர் சேமித்து வைக்க வக்கு இல்லை அதை அப்படியே கடலுக்கு அனுப்பீருங்க. தண்ணி vathana உடனே போய் கர்நாடக காரன்கிட்ட பிச்சை எடுங்க. இதுதானே காலம் காலமாக நடக்குது.


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 14:07

ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியதால்தான் இவ்வளவு நீர் வருகிறது. கிருஷ்ண ராஜ சாகர் நிரம்ப ஸ்டாலின்தான் காரணம். இது திராவிட மாடல்.


C.anandakumar
ஜூலை 25, 2024 21:10

தனி மனித தாக்குதல் சரியில்லை போன முறை கர்நாடகாவின் முதல்வராக இருந்தவர் தண்ணீரை திறந்து விடவில்லை


J.Isaac
ஜூலை 25, 2024 12:56

பிஜேபி, அதிமுக காவேரி அரசியல் முடிவுக்கு வந்தது.


Anbuselvan
ஜூலை 25, 2024 12:22

அரசாங்கங்களும், நடுவர் குழுவையும் மற்றும் நீதிமன்றங்களை நாடுவதை விட இயற்கை மழையை வேண்டுவது சால சிறந்தது போலும்


venugopal s
ஜூலை 25, 2024 12:12

காவிரி நீர் கர்நாடகா தமிழக மக்களுக்கு மட்டுமே உரிமையானது அல்ல.இயற்கையின் நியதிப்படி அதை நம்பி உள்ள வங்காள விரிகுடா கடல் வாழ் உயிரினங்களுக்கும் உரிமை உள்ளது. அதனால் உபரி நீர் கடலுக்கு செல்வது நியாயமானதே !


skv srinivasankrishnaveni
ஜூலை 25, 2024 11:20

சிக்கனமா உஸ் பண்ண தெரியுமா தமிழர்களுக்கு இவ்ளோகஷ்டம் பட்டாலும் தண்ணீரை வீணாக்குவதுலே எக்ஸ்பர்டுங்களாச்சே . போதைலேயே தமிழன் சாவணும் என்றும் தங்களெல்லாம் கோடியிலேயே மிதக்கவேண்டும் என்ற பேராசைவெறி பிடிச்ச அரசியல்வியாதியாகளே அதிகம் உள்ள மாநிலம் தமிழனாடு


K.Ramachandran
ஜூலை 25, 2024 11:19

முறையே தமிழகம் இந்த காவிரி நீரை வங்க கடலுக்கு அனுப்பி வைக்கும்


Elangovan
ஜூலை 26, 2024 06:11

சபாஷ்


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 11:08

டூ லேட். லாபம் தரும் குறுவை போக விவசாயம் சாத்தியமில்லை . சம்பா சாகுபடி மழையை நம்பியுள்ளது. சென்ற ஆண்டின் நஷ்டத்தையே ஈடுகட்ட முடியாது.


Natarajan Ramanathan
ஜூலை 25, 2024 10:47

இனி வரும் வெள்ளம் முழுவதும் வேளச்சேரியிலும் முடிச்சூரிலும் திருப்பி விட்டால் மத்திய அரசிடம் வெள்ளநிவாரணம் கேட்டு அதிலும் கொள்ளை அடிக்கலாம் என்று தத்தி முதல்வர் தீவிர ஆலோசனை.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ