ராஜஸ்தானில் காஷ்மீர் மகுட தினம்
ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளிகளில் எந்தெந்த நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், ஜம்மு -- காஷ்மீருக்கு சிறந்து அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட ஆக., 5ம் தேதி, தங்க மகுட தினமாக கொண்டாடப்படும். இதைத் தவிர, மே 28ம் தேதி ஹிந்துத்வா தலைவர் வினாயக் தாமோதர் சாவர்க்கர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பிப்., 4ல் சூரிய நமஸ்காரம் தினம், பிப்., 7ல் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி, பிப்., 14ல் அன்னையர் தினம், தந்தையர் தினம், ஜன., 23ல் சுபாஷ் சந்திரபோஸ் தினம் ஆகியவையும் கொண்டாடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.