உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் டில்லி ஐகோர்ட்டில் மனு

சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் டில்லி ஐகோர்ட்டில் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சி.பி.ஐ.,யால் தான் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், இந்த வழக்கினை விசாரித்து வரும் மற்றொரு அமைப்பான சி.பி.ஐ., கெஜ்ரிவாலை திகார் சிறையிலேயே வைத்து கைது செய்தது. தற்போது, கெஜ்ரிவாலை ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. சி.பி.ஐ.,யால் தான் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை (ஜூலை 2) விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Balasubramanian
ஜூலை 01, 2024 20:33

அவர் வக்கீல் பிரபல அபிஷேக் மனு சிங்வி ஆக இருக்கலாம்! அதற்காக மனு மேல் மனு போடுவதா? நீதிபதிகளுக்கும் சிறிது ஓய்வு தேவை! மக்களும் வேறு விஷயங்களை பத்திரிக்கையில் படிக்க விரும்புகிறார்கள்


கூமூட்டை
ஜூலை 01, 2024 18:45

இது தான் திருடன் தப்பிக்க தொழில்நுட்பம்


Raghavan
ஜூலை 01, 2024 17:29

சட்டத்தில் உள்ள ஓட்டை உடைசல்களை வைத்து இவன் வெளியே வருவதற்கு நமது அமைச்சர் தங்க முடிக்கு ஏற்பாடுசெய்த்தவர்கள் செய்தால் இவர் கண்டிப்பாக வெளியே வந்துவிடுவார்


மேலும் செய்திகள்