உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு

கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு

புதுடில்லி : மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் கோரி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று முக்கிய உத்தரவு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மதுபான கொள்கையில் பண மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் மார்ச் 21ல் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கில், லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 2ல் மீண்டும் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் ஜாமின் கோரி டில்லி கோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீது ஏற்கனே இரு தரப்பு விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Balasubramanian
ஜூன் 20, 2024 08:49

முதலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆணை இடுங்கள் யுவர் ஆனர்!


Kasimani Baskaran
ஜூன் 20, 2024 06:20

சென்ற முறை டெல்லியை கைப்பற்றலாம் என்று ஜாமீன் கிடைத்து அது சொதப்பி விட்டது. இந்த முறை இந்திக்கூட்டணியை என்ன செய்ய காத்திருக்கிறாரோ...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை