உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முல்லை பெரியாறில் புதிய அணை : கேரள அமைச்சர் உறுதி

முல்லை பெரியாறில் புதிய அணை : கேரள அமைச்சர் உறுதி

மூணாறு,“தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும்,” என, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் பேசினார்.கேரளாவின் இடுக்கி ஐ.டி.ஐ., மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது. இதில், கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:இந்தியா மதச்சார்பின்மை அடிப்படையில் ஒற்றுமையுடன் இயங்குகிறது. இந்த ஒற்றுமை நாட்டை பலப்படுத்துகிறது. மதத்தின் பெயரால் சமூகத்தை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டோம். இடுக்கி மாவட்டம் இயற்கை பேரிடர் சவால்களை பெரிதும் எதிர்கொண்டுள்ளது. முல்லைப் பெரியாறில் புதிய அணை வேண்டும் என்பது நம் கோரிக்கை.தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய அணை கட்ட வேண்டும். அணை பெயரில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்.இவ்வாறு அவர் பேசினார்.முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக கூறி, அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை கேரளாவில் வலுத்துள்ள நிலையில், அணை பலமாக உள்ளதாக ஆய்வு செய்த நிபுணர் குழுக்கள் தெரிவித்துள்ளன.எனினும், அங்கு புதிய அணை கட்டக்கூடாது என, தமிழக அரசு மற்றும் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வயநாடுக்கு ஆரஞ்சு அலெர்ட்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுநிலை போன்ற சூழல் உருவாகி உள்ளதால், கேரள மாநிலம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே நிலை, வரும் 19ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சமீபத்தில் நிலச்சரிவால் கடும் பாதிப்புகளை சந்தித்த வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் அதீத கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இப்பகுதிகளில், 11 செ.மீ., முதல் 20 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளது. இதுதவிர கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்றும், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'கேரளா, லட்சத்தீவு, கர்நாடக கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மோசமான வானிலை நிலவுவதால் அப்பகுதிகளில் மீனவர்கள், வரும் 19ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, ஏழு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kulandai kannan
ஆக 16, 2024 22:34

மாநில எல்லை பிரிப்பின்போது, இடுக்கி மாவட்டத்தைக் கோராமல், கன்னியாகுமரி மாவட்டத்தை (சுயஜாதி நோக்கில்) போராடி பெற்றதன் விளைவு இந்தப் பிரச்னை.


Swaminathan L
ஆக 16, 2024 12:15

முல்லைப் பெரியாறு புது அணை கட்டுவது உறுதி, மேகேதாது அணை கட்டுவது உறுதி, ஒரு அணையும் கட்ட ஒப்புதல் தர மாட்டோம் உறுதி, இது இரண்டு மாநிலங்களும் பேசி சமரசம் செய்து கொள்ளும் விஷயம் என்பதில் உறுதி... இவை பின்னாளில் என்னாகுமோ தெரியாது. ஆனால், ஒரு விஷயத்தில் என்றும் மாறாத உறுதி - தமிழகம் காலத்திற்கும் நீர்ப் பங்கீடு குறித்து அண்டை மாநிலங்களிடம் தீர்வு தேடுவது.


veeramani
ஆக 16, 2024 09:28

ஒரு தென் தமிழக விவசாயி கருத்து .. அன்றைய காலத்தில் பென்னி குயிக் அராபிக் கடலில் விழும் தண்ணீரை எங்களது ராம்நாத், சிவகங்கை, மதுரை, தேனீ மாவட்டங்களுக்கு செல்லுமாறு முல்லைப்பெரியாறு ஆணை காட்டினார் எவர் வேண்டுமானாலும் அவர்களது பகுதியில் தடுப்பணைகள் கட்டலாம் இடுக்கி டாம் அருகில் கேரளாவின் அடுத்த ஆணை கட்டிக்கொள்ளட்டும். ஆனால் தற்போதைய முல்லைப்பெரியாறு ஆணை பாதுகாப்பு, பராமரிப்பு, இயக்கம் அனைத்தும் தமிழக மக்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்படவேண்டும்


Svs Yaadum oore
ஆக 16, 2024 06:57

கேரளாவில் முல்லைப்பெரியாறு அணை பிரச்னையை கிறிஸ்தவ அமைப்புகள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் கையில் எடுத்துள்ளதால் மீண்டும் சூடு பிடிக்கத்துவங்கியுள்ளதாம் ... கேரளாவில் பெரியாறு பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழு சார்பில் கூட்டம் நடந்ததாம். அதில் கிறிஸ்தவ அமைப்புகளைச் சார்ந்தவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனராம் ..... சிறுபான்மை என்றால் இங்குள்ள விடியல் திராவிடம் சமூக நீதி மத சார்பின்மையாக கட்ச தீவு காவேரி பிரச்னையில் கைவிட்டது போல இதிலும் கேரளவிடம் தமிழக உரிமையை விற்று விடும் ....ஆனால் நாட்டின் காங்கிரஸ் டெல்லி இத்தாலி எதிர்க்கட்சி தலைவர் இந்த பிரச்னையில் தலையிட்டு மத சார்பின்மையாக தமிழக உரிமையை மீட்பார் ...


Kasimani Baskaran
ஆக 16, 2024 05:54

தமிழகமல்லாத மாநிலங்கள் அணை கட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றன - ஆனால் தமிழகம் கட்டாந்தரையில் இருப்பதால் அது முடியாது என்று முரண்டு பிடிக்கிறது.


நிக்கோல்தாம்சன்
ஆக 16, 2024 03:29

உன்னை போன்ற மக்களால் தான் வயநாட்டில் அப்படி ஒரு பேரிடர் ஏற்பட்டது , இன்னமும் உன்னை பதவியில் வைத்துள்ள கேரளா மக்கள் உண்மையிலேயே படித்தவர்கள் தானா?


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி