மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
55 minutes ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
56 minutes ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
57 minutes ago
பெங்களூரு: பெங்களூரின் இரண்டு புதிய வழித்தடங்களில் பி.எம்.டி.சி., பஸ் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:பயணியர் வசதிக்காக, கோரமங்களா - ஜெயநகர் நான்காவது பிளாக்; கோரமங்களா - சிவாஜிநகர் இடையே, இணைப்பு ஏற்படுத்தும் வகையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.கோரமங்களா - ஜெயநகர் நான்காவது பிளாக் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்சின் எண் 170. இது, 18 டிரிப்புகள் இயங்கும். கோரமங்களாவில் இருந்து புறப்பட்டு செயின்ட் பிரான்சிஸ் கல்லுாரி, கே.ஆர்.எம்., 80 அடி சாலை, கோரமங்களா கல்யாண மண்டபம், ஆடுகோடி, பெங்களூரு டெய்ரி சதுக்கம், கார்மல் கான்வென்ட் வழியாக செல்லும்.கோரமங்களாவில் இருந்து, காலை 7:30, 8:30, 9:25, 11:45, மதியம் 12;45, 14:00, 15:00, மாலை 16:15, 5:15 மணிக்கும்; ஜெயநகர் நான்காவது பிளாக்கில் இருந்து காலை 8:25, 9:25, 10:50, 11:50, 12:40, 1:40, 2:55, 3:55 மணிக்கு புறப்படும்.கோரமங்களா - சிவாஜி நகர் இடையே, 141 - கே எண் கொண்ட பஸ் இயக்கப்படும். இது, 10 டிரிப்புகள் இயங்கும். இந்த பஸ், செயின்ட் பிரான்சிஸ் கல்லுாரி, கே.ஆர்.எம்., 80 அடி சாலை, ராஜேந்திர நகர், விவேக்நகர், ஆஸ்டின் டவுன், மேயோஹால் வழியாக செல்லும்.கோரமங்களாவில் இருந்து, காலை 8:00, 9:25, 12:15, 2:30, மாலை 4:45 மணிக்கு புறப்படும். சிவாஜிநகரில் இருந்து காலை 8:55, 11:20, 1:10, 3:25, மாலை 5:45 மணிக்கு புறப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
55 minutes ago
56 minutes ago
57 minutes ago