உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒக்கலிகர் முதல்வர் ஆவார் கிருஷ்ணபைரே கவுடா கணிப்பு 

ஒக்கலிகர் முதல்வர் ஆவார் கிருஷ்ணபைரே கவுடா கணிப்பு 

சிக்கபல்லாப்பூர் : “வருங்காலத்தில் ஒக்கலிக சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வர் ஆவார்,” என, அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில், சித்தராமையா முதல்வராக உள்ளார். லோக்சபா தேர்தலுக்கு பின்னர், முதல்வர் மாற்றம் நடக்கலாம். துணை முதல்வர் சிவகுமார், முதல்வர் ஆகலாம் என்று பேச்சு அடிபடுகிறது.ஒக்கலிக சமூகத்தைச் சேர்ந்த சிவகுமாரும், தேர்தல் பிரசாரத்தில் ஒக்கலிகர்கள், தனது கையை பலப்படுத்த வேண்டும் என, பேசி வருகிறார்.இந்நிலையில், வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, சிக்கபல்லாப்பூரில் நேற்று அளித்த பேட்டி:பா.ஜ.,வில் ஒக்கலிகர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கு 'சீட்' மறுக்கப்பட்டது. ஆனால் காங்கிரசில் ரெட்டிகள் எட்டு ஒக்கலிகருக்கு, சீட் கொடுக்கப்பட்டு உள்ளது.வரும் காலத்தில் ஒக்கலிக சமூகத்தை சேர்ந்தவர் முதல்வர் ஆவார். இதனால் தேர்தலில் போட்டியிடும் ஒக்கலிக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கிருஷ்ண பைரேகவுடாவும் ஒக்கலிகர் தான். சட்டசபை தேர்தலுக்கு முன்பு, அவரது பெயரும் முதல்வர் பதவிக்கு அடிபட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை