மேலும் செய்திகள்
தவறுக்கு துணை போனது கிடையாது : சொல்கிறார் அஜித் பவார்
33 minutes ago
பெங்களூரு: இதய அறுவை சிகிச்சை முடிந்து பெங்களூரு திரும்பினார் குமாரசாமி. 'உங்களின் ஆசைக்கு குறுக்கே நிற்க மாட்டேன்' என கூறியதன் மூலம் மாண்டியாவில் போட்டியிடுவதை மறைமுகமாக கூறியுள்ளார்.இதய அறுவை சிகிச்சைக்காக, சென்னையில் தனியார் மருத்துவமனையில் ம.ஜ.த.,வின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து, சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு ஜெ.பி., நகரில் உள்ள தனது இல்லத்துக்கு நேற்று காலை வந்தார்.அவருக்காக மாண்டியா மாவட்டம், ராம்நகர், சென்னபட்டணா சட்டசபை தொகுதி ம.ஜ.த.,வினர் காத்திருந்தனர். அப்போது மாண்டியா தொண்டர்கள், 'மாண்டியாவில் நீங்கள் போட்டியிட வேண்டும்' என்று வலியுறுத்தினர்.இதனால் உணர்ச்சிவசப்பட்ட குமாரசாமி பேசியதாவது:தொண்டர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் அபிமானம், அன்பு, நம்பிக்கையை விலைக்கு வாங்க முடியாது. குறிப்பாக மாண்டியாவில் அன்பையும், நம்பிக்கையும் கொடுத்திருக்கிறீர்கள்.பூமியில் இருக்கும் வரை அதை மறைக்க முடியாது. மூன்று முறை, இதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன். எங்கள் கட்சியில் பெரிய தலைவர்கள் இல்லை. எங்கள் கட்சியால் வளர்ந்தவர்கள், எங்களை தெருவில் நிறுத்தி விட்டனர்.உங்கள் ஆசையை ஏமாற்ற மாட்டேன் என்று ஏற்கனவே மாண்டியாவில் கூறிவிட்டேன். நான் பிறந்தது ஹாசன் மாவட்டத்தில், ராம்நகர், மாண்டியாவில் எனக்கு அரசியல் வாழ்க்கை பிறந்தது.இவ்வாறு அவர் கூறினார்.நிகில் குமாரசாமி கூறுகையில், ''மாண்டியா மக்கள், எங்கள் தந்தை மீது தனி அபிமானம் வைத்து உள்ளனர். சென்னபட்டணா தொகுதி தொண்டர்கள், தலைவர்களுடன் நாளை அவர் பேசுவார். அதன் பின் சரியான முடிவை எடுப்பார்,'' என்றார்.ஒருபுறம் மாண்டியா லோக்சபா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட தலைவர்கள், தொண்டர்கள் கோரி வருகின்றனர். மறுபுறம் சென்னபட்டணா சட்டசபை தொகுதியை விட்டு வெளியேறக்கூடாது என்று கூறி, நிகில் குமாரசாமியின் காரை வழிமறித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.மாண்டியாவில் போட்டியிடுவதை மறைமுகமாக கூறியுள்ள குமாரசாமி, சென்னபட்டணா சட்டசபை தொகுதி தொண்டர்கள், தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, விளக்க உள்ளார்.ஒருவேளை குமாரசாமி மாண்டியாவில் போட்டியிட்டால், காலியாகும் சென்னபட்டணா சட்டசபை தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், நிகில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.அதேவேளையில், கடைசி நேரத்தில் நிகில் குமாரசாமியை களமிறக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.தற்போதைய சுயேச்சை எம்.பி., சுமலதா, என்ன முடிவெடுக்க போகிறார் என்பது மர்மமாகவே உள்ளது. ம.ஜ.த., வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அடுத்த கட்ட முடிவெடுக்க உள்ளார். கடந்த லோக்சபா தேர்தல் போலவே, மாண்டியா தொகுதி மீண்டும் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
33 minutes ago