உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகனுக்கு குமாரசாமி பரிசு

மகனுக்கு குமாரசாமி பரிசு

பெங்களூரு: மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி, தன் மகன் நிகிலுக்கு கவுரி பண்டிகையை ஒட்டி, கைக்கடிகாரம் பரிசளித்தார்.குமாரசாமி மத்திய தொழிற்துறை அமைச்சராக பதவியேற்ற பின், ஜூன் மாதம் ஹரியானாவின், பிஞ்சோரில் உள்ள ஹெச்.எம்.டி., நிறுவனத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். தொழிற்சாலையின் வர்த்தகம், லாபம், நஷ்டம், வருவாய், கடன் பாக்கி, தற்போதைய நிதி நிலைமையை பற்றி கேட்டறிந்தார்.தொழிற்சாலை ஊழியர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினருடன் பேச்சு நடத்தினார். அரசு சார்ந்த தொழிற்சாலையை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக பணியாற்ற வேண்டும் என, அதிகாரிகள், ஊழியர்களுக்கு அறிவுரை கூறினர்.இந்நிலையில், கவுரி பண்டிகையை ஒட்டி, தன் மகன் நிகிலுக்கு ஹெச்.எம்.டி., கைக்கடிகாரத்தை குமாரசாமி நேற்று பரிசளித்தார். இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் நிகில் கூறியதாவது:ஹெச்.எம்.டி., கைக்கடிகாரம், ஒரு காலத்தில் இந்தியாவின் இதய துடிப்பாக இருந்தது. அனைவரின் வாழ்க்கையிலும் அங்கமாக விளங்கியது. எங்கள் தலைமுறை இளைஞர்களுக்கு, ஹெச்.எம்.டி., கைக்கடிகாரம் குறித்து தெரிய வேண்டும்.என் தந்தை குமாரசாமி, கவுரி பண்டிகையான இன்று (நேற்று) ஹெச்.எம்.டி., கைக்கடிகாரம் வாங்கி, என் கையில் கட்டினார். இளம் தலைமுறையினர் நமது நாட்டின் பெருமையின் அடையாளமான ஹெச்.எம்.டி., கைக்கடிகாரத்தையே கட்ட வேண்டும் என்பது, என் வேண்டுகோள்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை