| ADDED : ஜூலை 03, 2024 10:30 PM
மாண்டியா : ''மாநிலத்தில் இரண்டு முறை முதல்வராக இருந்தும், சென்னப்பட்டணாவுக்கு குமாரசாமி எதுவும் செய்யவில்லை,'' என, துணை முதல்வர் சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.மாண்டியா, மத்துாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: சென்னப்பட்டணாவில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து, மக்கள் குறைகளை கேட்டதை குமாரசாமியால் பொறுத்து கொள்ள முடியவில்லை. சென்னப்பட்டணா மக்கள் தங்களுக்கு என்ன தேவையோ, அதை பற்றி என்னிடம் மனு கொடுத்தனர். மக்களின் தேவையை நிறைவேற்ற தான், நாம் அரசியலுக்கு வந்துள்ளோம்.இரண்டு முறை முதல்வராக இருந்தும், சென்னப்பட்டணாவுக்கு குமாரசாமி எதுவும் செய்யவில்லை. ஆனால் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம். நாங்கள் அனைவரும் பெங்களூரு நகரை சேர்ந்தவர்கள். சென்னப்பட்டணா, கனகபுரா, மாகடி, ஹொஸ்கோட் ஆகிய பகுதிகள் பெங்களூருக்கு உட்பட்டது.கே.ஆர்.எஸ்., அணைக்கு அருகில் சோதனை அடிப்படையில், கல்குவாரிகளுக்கு வெடி வைக்க அனுமதி வழங்கப்படவில்லை. கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, பேபி மலை பல கி.மீ., தொலைவில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.