குண்டாசில் தங்கவயல் ரவுடி சிறையில் அடைப்பு
தங்கவயலின் பிரபல ரவுடி சரத் என்ற சரத்குமார் மீது, 45 கிரிமினல் வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் அவரை சிறையில் வைத்திருப்பது சரி தான் என்று கர்நாடக உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தெரிவித்துள்ளது. உத்தரவு
தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையை சேர்ந்தவர் சரத் என்ற சரத்குமார், 24., இவர் மீது, 45 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவ்வாண்டு ஏப்ரல் 4ம் தேதி, இவரை குண்டர் சட்டத்தில், சிறையில் அடைக்க கோலார் கலெக்டர், உத்தரவு பிறப்பித்தார். தனது கணவர் சரத்தை சட்டவிரோதமாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். எனவே என்று கூறி, அவரது மனைவி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.சரத் மீதான வழக்குகளில் அவரது தாய் மொழியான தமிழில் குற்ற பத்திரிகை மொழி பெயர்த்து நீதிமன்றத்தில் வழங்கப் பட்டது. சில வழக்குகளில் இருந்து, அவர் விடுவிக்கப் பட்டார்; சில வழக்குகளில் ஜாமின் கிடைத்துள்ளது. இவர் ஒரு போதும் சட்டத்தை மீறியது இல்லை. வாரன்ட் இல்லாமல் கைது செய்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.அரசு வக்கீல் பெல்லியப்பா வாதிடுகையில், ''சரத் தொடர்ந்து பல கிரிமினல் வழக்குகளில் தொடர்பு உள்ளவர். இவருக்கு கன்னடம், தமிழ், ஆங்கிலம் நன்றாகவே தெரியும். அவருக்கு புரிகிற வகையில் குற்றம் சாட்டப்பட்ட விபரங்கள் விளக்கப்பட்டுள்ளது,'' என்றார்.வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் கிருஷ்ணா எஸ்.தீக் ஷித், ராமசந்திர டி. ஹுட்டர் கூறியதாவது: ஏராளமான வழக்குகள்
சரத்குமார் மீது, 45 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை வழக்கு ஒன்றில் விடுவித்த சலுகை சந்தேகத்துக்குரியது. இவரது முதல் மனைவி பானுப்பிரியாவை கடத்திய வழக்கில் விடுவிக்க பட்டுள்ளார். இது தவிர இரண்டு கொலை முயற்சி வழக்குகள்; ஒரு கொள்ளை வழக்கு; 32 திருட்டு வழக்குகள்; ஒரு அரசு ஊழியரை தாக்கிய வழக்கு; நான்கு தாக்குதல் வழக்குகள் 2008ம் ஆண்டு முதல் 2024 வரை வழக்குகள் பதிவாகியுள்ளன.மேற்கொண்டு குற்றங்கள் நடக்காமல் தடுக்க, குண்டர் சட்டத்தில் அடைத்து உள்ளது சரியான முடிவு. எனவே 'ஹேபியஸ் கார்பஸ்' என ஆள் கொணர்வு மனு ரத்து செயயப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் --