உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மங்களூரில் நிலச்சரிவு; 12 ரயில்கள் ரத்து

மங்களூரில் நிலச்சரிவு; 12 ரயில்கள் ரத்து

பெங்களூரு : 'மங்களூரின் எடகுமேரி, கடரவள்ளி இடையே நிலச்சரிவு ஏற்பட்டதால், பெங்களூரு, யஷ்வந்த்பூர் உட்பட பல இடங்களில் இருந்து மங்களூரு செல்லும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் எடகுமேரி, கடரவள்ளி இடையே நிச்சரிவு ஏற்பட்டது. அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து தொடர்பாக தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:* ரயில் எண் 16511: பெங்களூரு - கண்ணுார் ரயில்* எண் 16595: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - கார்வார் ரயில்* எண் 16585: விஸ்வேஸ்வரய்யா முனையம் - முருடேஸ்வர் ரயில்* எண் 07377: விஜயபுரா - மங்களூரு சென்ட்ரல் ரயில்* எண் 16515: யஷ்வந்த்பூர் - கார்வார் ரயில்* எண் 16576: மங்களூரு ஜங்ஷன் - யஷ்வந்த்பூர் ரயில்கள் 5ம் தேதி வரை* எண் 16512: கண்ணுார் - கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில்* எண் 16596: கார்வார் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில்* எண் 16586: முருடேஸ்வர் - விஸ்வேஸ்வரய்யா முனையம் ரயில்* எண் 07378: மங்களூரு சென்ட்ரல் - விஜயபுரா ரயில்* எண் 16516: கார்வார் - யஷ்வந்த்பூர் ரயில்கள் வரும் 6ம் தேதி வரை* எண் 16575: யஷ்வந்த்பூர் - மங்களூரு ஜங்ஷன் ரயில் நாளை வரையிலும் ரத்து செய்யப்பட்டுஉள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை