உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்டில் சட்டமீறல், ஊழல் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

ஜார்க்கண்டில் சட்டமீறல், ஊழல் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊழல் மற்றும் சட்ட மீறல் அதிகம் நடந்து வருகிறது. இதனால் ஆட்சி மாற்றம் தேவை என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பீஹார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பாரம்பரிய தொழில்களை மீட்டெடுக்க வேண்டும். ஜார்கண்ட் மாநிலத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. 2024-25 பட்ஜெட்டில் ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரயில் திட்டங்களுக்காக 7,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது

சட்ட மீறல்

எளிதாக தொழில் செய்யக்கூடிய முதல் ஐந்து மாநிலங்களில் ஜார்கண்ட் இடம்பெற்றிருந்தது. ஆனால் இப்போது இங்கு காட்டாட்சி நடந்து வருகிறது. ஊழல் மற்றும் சட்ட மீறல் அதிகம் நடந்து வருகிறது. இதனால் ஆட்சி மாற்றம் தேவை. ஆட்சி மாற்றம் என்பது காலத்தின் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

முருகன்
மே 10, 2024 14:23

பக்கத்தில் இருக்கும் பிகார் மாநிலம் பற்றி பேசினால் நன்றாக இருக்கும்


Syed ghouse basha
மே 09, 2024 18:21

பாஜக மெகாஒரிஜினல் ஊழல் ஆட்சி ஒழியனும் இந்தியா வெல்னும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை