உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பன்னரகட்டா தேசிய பூங்காவில் ஜூன் இறுதிக்குள் சிறுத்தை சபாரி

பன்னரகட்டா தேசிய பூங்காவில் ஜூன் இறுதிக்குள் சிறுத்தை சபாரி

பெங்களூரு: ''பன்னரகட்டா மிருகக்காட்சி சாலையில், தற்போது, புலி, சிங்கம் 'சபாரி' நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள், சிறுத்தை 'சபாரி' துவக்கப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.கர்நாடக மிருகக்காட்சி சாலைகள் ஆணைய நிர்வாக குழுவின், 156வது ஆலோசனைக் கூட்டம், பெங்களூரு விகாஸ் சவுதாவில், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தலைமையில் நேற்று நடந்தது.கர்நாடகாவில் உள்ள மிருகக்காட்சி சாலைகளை மேம்படுத்துவது, வருவாய் அதிகரிப்பது, பார்வையாளர்களை ஈர்க்க நடவடிக்கை எடுப்பது என பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.பின், அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது:மைசூரு சாமராஜேந்திரா மிருகக்காட்சி சாலை மற்றும் காரஞ்சி ஏரியின் நடுவே, அக்வேரியம் அமைப்பது தொடர்பாக, 15 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.இதுபோன்று, பன்னரகட்டா தேசிய உயிரியல் பூங்காவில், நன்னீர் மற்றும் உப்பு நீர் கலந்த அக்வேரியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை பரிசீலனை செய்யப்பட்டது. இறுதியில், சர்வதேச தரத்தில் அக்வேரியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.வெவ்வேறு நோய்களால் விலங்குகள் இறப்பதை கட்டுப்படுத்த, காலியாக உள்ள கால்நடை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. சித்ரதுர்கா ஆடு மல்லேஸ்வரா சிறிய மிருகக்காட்சி சாலைக்கு உள்ளூர் கால்நடை மருத்துவர்களை நியமனம் செய்ய முதல் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.பன்னரகட்டா தேசிய உயிரியல் பூங்காவின் விலங்குகள், பறவைகள், சுற்றுலா பயணியர் வசதிக்காக பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், தண்ணீர் வினியோகம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி முடிந்துள்ளதால், தண்ணீர் பயன்படுத்த சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒப்பந்த அடிப்படையில், மாதந்தோறும் 21,000க்கும் அதிக சம்பளம் பெறும், 153 ஊழியர்களின் மருத்துவ செலவை ஏற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.பன்னரகட்டா மிருகக்காட்சி சாலையில் தற்போது, புலி, சிங்கம் சபாரி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் சிறுத்தை சபாரி துவக்கப்படும்.கதக் மிருகக்காட்சி சாலையை விரிவாக்கம் செய்ய, 13.20 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அனுமதி. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு, மலிவு விலையில் மதிய உணவு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கேமராவுக்கு அனுமதி

மைசூரு சாமராஜேந்திரா மிருகக்காட்சி சாலைக்கு வன விலங்குகள், பறவைகளை காண்பதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். தற்போது நுழைவுக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இனி, படம் பிடிக்கும் கேமராவுக்கு 150 ரூபாயும்; வீடியோ கேமராவுக்கு 300 ரூபாயும் கட்டணம் வசூலிக்க, அரசு நேற்று அனுமதி அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை