உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீட்டெடுப்போம்!

மீட்டெடுப்போம்!

கடந்த பத்தாண்டுகளில் நடந்த கொள்ளை குறித்து ஆதிஷி எப்போது கணக்கு கொடுப்பார் என்று நான் கேட்க விரும்புகிறேன். நாங்கள் பதவியேற்ற பிறகு, சி.ஏ.ஜி., அறிக்கைகளை சட்டசபையில் தாக்கல் செய்வோம். பொதுப் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் மோடி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பைசாவையும் மீட்டெடுப்போம் என்று மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.வீரேந்திர சச்தேவா,பா.ஜ., தலைவர்மிகப்பெரிய பொய்!ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் நிறைந்த நிர்வாகத்தால் டில்லியின் கருவூலம் காலியாகிவிட்டது. கடைசி நாட்களில், ஆம் ஆத்மி அரசு, அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க மத்திய அரசிடமிருந்து 10,000 கோடி ரூபாய் கடன் கோரியது. அத்தகைய சூழ்நிலையில், டில்லியின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி தற்காலிக முதல்வர் ஆதிஷி பெருமை பேசுவது மிகப்பெரிய பொய்.ராம்வீர் சிங் பிதுரி,தெற்கு டில்லி எம்.பி.,பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !