உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசம் போல் இங்கும் நடக்கலாம் : குர்ஷித் கருத்திற்கு பா.ஜ., கண்டனம்

வங்கதேசம் போல் இங்கும் நடக்கலாம் : குர்ஷித் கருத்திற்கு பா.ஜ., கண்டனம்

புதுடில்லி : 'வங்கதேசத்தில் நடப்பது இந்தியாவிலும் நடக்கலாம்' என, காங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்ததற்கு, பா.ஜ., நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.சமீபத்தில், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித், 'வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்கள், இந்தியாவிலும் நடக்கலாம்' என்றார். இதற்கு பா.ஜ.,வினர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து, பா.ஜ., - எம்.பி., ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், ''காங்., செயற்குழு உறுப்பினர் சல்மான் குர்ஷித், அராஜக கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது, தேசத் துரோகம். தோல்வியை மறைக்க, காங்., இது போன்ற அராஜக கருத்துக்களை வெளியிடுவது, துரதிர்ஷ்டவசமானது,'' என்றார்.டில்லியில் நேற்று, பா.ஜ., - எம்.பி., சம்பித் பத்ரா, நிருபர்களிடம் கூறுகையில், ''வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவிலும் நடக்க வேண்டும் என, பிரதான எதிர்க்கட்சியான காங்., விரும்புகிறதா? என்ன மாதிரியான மனநிலை இது? ''மக்கள் மன்றத்தில் தோல்வி அடைந்து விட்டு, அராஜகத்தை கட்டவிழ்த்து விட, காங்., முயற்சிக்கிறது. கட்சியின் மூத்த தலைவர் இப்படி கருத்து தெரிவிக்கையில், அதை கண்டிக்காமல் காங்., வேடிக்கை பார்க்கிறது. அக்கட்சியின் எண்ணத்தையே, சல்மான் குர்ஷித் பிரதிபலித்திருக்கிறார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

R.Krishnakumar
ஆக 12, 2024 10:03

There is no responsible leaders including Mr. Ragul Gandhi in Congress Party and also no good responsible leaders in other party also.


K.G.Ramani
ஆக 11, 2024 11:42

The statement of Mr. Salman Kurshid is very unfortunate. Had it been a common man, he would have been hauled over the coals for making a seditious statement. He should have been more guarded in his public statements, as a responsible leader of the Congress Party. Such statements will only help to foster fissiparous tendencies, paving for the balkanization of the country.


Murugan
ஆக 10, 2024 18:12

மக்களின் மனதில் எதை விதிப்பது எதை விதிக்ககூடாது என்று தெரியவில்லை.இவர் எல்லாம் அரசியல் தலைவர்.இங்கு குளிர்காய நினைக்கும் அரசியல் தலைவர் வாழ்க வாழ்க வாழ்க அரசியல்


Raj
ஆக 09, 2024 09:59

அராஜகம் என்பது எங்கும் கூடாது சர்வாதிகாரமும் அதுபோல்தான்


ச. ராமச்சந்திரன்
ஆக 09, 2024 09:35

India is not Bangladesh


R.Varadarajan
ஆக 09, 2024 02:08

நம் நாட்டிலேயே இதுவரை பதவி வகித்த வெளியுறவுத்துறை அமைச்சர்களில் தேர்ந்தெடுத்த 'உதவாக்கரை ' இவர்தான இப்போது இண்டிக்கூட்டணி ஆட்சியில் இருந்தால் இப்பொது சொன்னதையே திரும்ப சொல்வாரா? அப்போது நாட்டில் மக்கள் கலவரத்தில் ஈடுபடலாமா?


R K Raman
ஆக 08, 2024 21:28

இந்த ஆள் சரியான மத வெறியன் மற்றும் ஊழல் பேர்வழி. வழக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை


Kumar Kumzi
ஆக 08, 2024 12:50

இந்த கேடுகெட்ட தேசத்துரோக ஹிந்தி கூட்டணி இந்தியாவின் அழிவை தான் விரும்புகிறது மூர்க்கம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நாடு முன்னேற விடமாட்டானுங்க


Swaminathan L
ஆக 08, 2024 11:28

அவ்வாறு நடக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சியினர் சிலரின் இரகசிய விருப்பமாக இருக்கிறதோ? மூன்றாம் முறையும் அதிகாரம் கைக்கு வராதது கண்டபடி பேச வைக்கிறது.


Nandakumar Naidu.
ஆக 08, 2024 11:04

இவன் மற்றும் இவனைப்போன்றோர் எல்லாம் நன்றிகெட்ட கூட்டம். மண்ணோடு மண்ணாக நிரந்தரமாக அழிக்க பட வேண்டிய தீய சக்திகள்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ