உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தேர்தல் எதிரொலி 402 எஸ்.ஐ., தேர்வு ஒத்திவைப்பு

லோக்சபா தேர்தல் எதிரொலி 402 எஸ்.ஐ., தேர்வு ஒத்திவைப்பு

பெங்களூரு: லோக்சபா தேர்தல் எதிரொலியாக, அடுத்த மாதம் 8ம் தேதி நடக்க இருந்த, 402 எஸ்.ஐ., பணியிடங்களுக்கான, தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.கர்நாடகாவில் காலியாக இருந்த 545 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு கடந்த 2021ல் தேர்வு நடந்தது. அதன் பின்னர் 402 பணியிடங்களை நிரப்பவும் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் 545 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், முறைகேடு நடந்ததால், மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 402 பணியிடங்களை நிரப்பும், தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் கடந்த ஜனவரியில், 545 பணியிடங்களுக்கு, மறுதேர்வு நடந்தது. இதையடுத்து 402 பணியிடங்களை நிரப்ப, மே 8ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் இரண்டு கட்டமாக நடப்பதால், மே 8ம் தேதி நடக்க இருந்த, தேர்வை தேதி குறிப்பிடாமல் அரசு ஒத்தி வைத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை