உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியின் முகத்தை பார்த்து ஓட்டு போடுங்க

மோடியின் முகத்தை பார்த்து ஓட்டு போடுங்க

விஜயபுரா : ''என்னை பார்த்து யாரும் ஓட்டு போட வேண்டாம். பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தை பார்த்து ஓட்டு போடுங்கள்,'' என விஜயபுரா பா.ஜ., - எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி தெரிவித்தார்.விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி வழங்கிய நிதியால் தான், இத்தொகுதி வளர்ச்சி அடைந்தது. எனவே என்னை பார்த்து யாரும் ஓட்டு போட வேண்டாம். மோடியின் முகத்தை பார்த்து ஓட்டு போடுங்கள். எப்போதெல்லாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, தனது கடைசி காலத்தில், அரசியலில் பா.ஜ.,வுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்று அப்போதே கூறினார். அவரின் கூற்று உண்மையானது. அவருக்கு பின், நானாக பா.ஜ.,வில் இணைந்தேன்.விஜயபுரா தொகுதி வளர்ச்சிக்கு பிரதமர், அமைச்சர்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் அனைத்திற்கும் உரிய நடவடிக்கை எடுத்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

spr
ஏப் 03, 2024 18:40

உண்மையே இந்தத் தேர்தல் பாராளுமன்றத்தில் யார் ஆட்சியமைப்பது யார் பிரதமர் என தீர்மானிப்பது இது யாரோ பேர் தெரியாத ஊர் முகம் தெரியாத ஒருவருக்கும் அகில இந்திய அளவில் ஒற்றைப் பெரிய கட்சியாக நிற்கும் பாஜகவுக்குமான தேர்தல்.பாராளுமன்றத்தில் வலுவாக ஒற்றை கட்சியாக இருக்கும் கட்சியே நிலையான ஆட்சியைத் தரவல்லது உதிரியாக ஒற்றுமையில்லாமல் விட்டுக் கொடுக்க தயாராக இல்லாமல் ஊழல் நபர்களின் கூட்டணியாக இருக்கும் கடசிகளால் உலக அளவில் ஆளுமை செய்ய இயலாது எனவே அந்த ஒரு காரணத்துக்காக மோடிக்கு,பாஜகவிற்கு வாக்களியுங்கள் ,


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை