உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அம்மாடியோவ்...! லாட்டரி மன்னன் மார்ட்டின் ஆண்டு வருவாய் ரூ.15 ஆயிரம் கோடி: அமலாக்கத்துறை அதிர்ச்சி

அம்மாடியோவ்...! லாட்டரி மன்னன் மார்ட்டின் ஆண்டு வருவாய் ரூ.15 ஆயிரம் கோடி: அமலாக்கத்துறை அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லாட்டரி மன்னன் என்று அழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த மார்ட்டின், தனது லாட்டரி வியாபாரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுவதாக, அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.கோவையைச் சேர்ந்தவர் சான்டியாகோ மார்ட்டின். இவர் தனது லாட்டரி தொழிலில் ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இவருக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.மார்ட்டின் லாட்டரி தொழிலில் சட்டவிரோதமான வழிகளை பயன்படுத்தி சம்பாதித்த சொத்துக்கள் என கண்டறியப்பட்ட 622 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொச்சி மண்டல அமலாக்கத் துறையினரும், 409 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொல்கத்தா மண்டல அமலாக்கத் துறையினரும் பறிமுதல் செய்துள்ளனர்.அமலாக்கத் துறையின் விசாரணையானது, 2014ம் ஆண்டு சி.பி.ஐ .,பதிவு செய்த ஒரு வழக்கு, 2022ம் ஆண்டு கொல்கத்தா போலீஸ் பதிவு செய்த இரு வழக்குகள், 2024ம் ஆண்டு மேகாலயா அரசு பதிவு செய்த ஒரு வழக்கு ஆகியவற்றின் அடிப்படையில் ஆனது.மேகாலயா அரசு பதிவு செய்த வழக்கில், சட்டவிரோதமாக மார்ட்டின் லாட்டரி விற்பனை செய்ததன் மூலம் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சமீபத்தில் மார்ட்டின் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத 12 கோடி ரூபாய் ரொக்கம், 6.4 கோடி மதிப்புள்ள டிபாசிட் கைப்பற்றப்பட்டது. கோவை, சென்னை, மும்பை, துபாய், லண்டன் ஆகிய இடங்களில் சொத்துக்களும், பங்குச்சந்தை முதலீடுகளும் கண்டறியப்பட்டன.மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் லிமிடெட் என்ற நிறுவனம், தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எக்கச்சக்கமாக நிதி வழங்கி பிரபலமானது. இந்த நிறுவனம் 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு 1368 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. மேற்குவங்க ஆளும் கட்சியான திரிணமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக பெற்ற மொத்த நிதி 1592 கோடி ரூபாயில், மார்ட்டின் நிறுவனம் மட்டுமே 542 கோடி நிதி வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி தி.மு.க.,வுக்கு 503 கோடி ரூபாய், பாஜ கட்சிக்கு 100 கோடி ரூபாய், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சிக்கு 154 கோடி ரூபாய், காங்கிரஸ் கட்சிக்கு 50 கோடி ரூபாய் மார்ட்டின் நிறுவனம் நன்கொடை வழங்கியுள்ளது. தி.மு.க., தேர்தல் பத்திர நன்கொடையாக பெற்ற 632 கோடி ரூபாயில், மார்ட்டின் நிறுவனம் மட்டுமே 503 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறை விசாரணையில் மேலும் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன சொத்துக்களை வாங்கி குவிப்பதற்காகவே, 350 கம்பெனிகளையும், ஸ்பெஷல் பர்பஸ் வெகிக்கிள் நிறுவனங்களையும் மார்ட்டின் தொடங்கியுள்ளார்.லாட்டரி விற்பனையில் பலவிதமான முறைகேடுகளில் அவர் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது நண்பர்களும், உறவினர்களும் லாட்டரி விநியோகஸ்தர்கள் ஆக நியமிக்கப்பட்டதும், அவர்கள் பரிசுக்குரிய லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யாமல் தாங்களே வைத்துக் கொண்டதும், கடைசியில் பரிசுத் தொகையை பெற்றதும் தெரியவந்துள்ளது.விற்பனை செய்யாத லாட்டரி சீட்டுகள் சட்டப்படி அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் முறைகேடு செய்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அமலாக்கத்துறை பறிமுதல் செய்த இரண்டு சொத்துக்களை விற்பனை செய்ததும் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை தயாராகி வருகிறது. ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் டர்ன் ஓவர் இருந்தாலும் மார்ட்டின் நிறுவனம் மிகக்குறைந்த லாபத்தையே கணக்கு காட்டி உள்ளது. இந்த நிறுவனம் சிக்கிம் லாட்டரி தான் பிரதானமாக விற்கிறது. பெரும் தொகை சம்பாதித்த போதும் சிக்கிம் மாநில அரசுக்கு 2014ம் ஆண்டு வரை வருவாய் பகிர்வாக 8 முதல் 10 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

வல்லவன்
ஜன 03, 2025 22:29

இவருடைய மருமகன்தான் புதுச்சேரி பிஜேபியின் அடுத்த தலைவராகிறார் விரைவில்... எல்லோரும் போய் புள்ள குட்டிய படிக்க வைங்க போங்கய்யா


sankaran
ஜன 03, 2025 18:29

இவனை பத்தி மாரிதாஸ் என்னிக்கோ சொல்லிட்டார் .. ED ரொம்ப லேட் ... அவ்ளோ பணமும் தீயமுகவும் மற்றும் மத மாற்றத்துக்கும் தான் ...


கத்தரிக்காய் வியாபாரி
ஜன 03, 2025 18:18

ஒரு வருஷம் உள்ளே வச்சு, எல்லாத்தையும் கறந்துட்டு விடுங்க


அப்பாவி
ஜன 03, 2025 17:47

வடக்கே ஒரு அ போல இங்கே ஒரு மா.


Cheenu
ஜன 03, 2025 17:32

பின்னே டெல்லி முதல் சென்னை வரை எல்லோருக்கும் மொய் எழுதணுமே


Sampath Kumar
ஜன 03, 2025 16:43

உங்க பாய்ஸ் விட கம்மி தான் வாயை பொலகத்தீர்


Vijay D Ratnam
ஜன 03, 2025 15:58

பின்னே மறுமவன உட்டு கட்டுமர மாஃபியா குடும்ப அரசியலை பொதுவெளியில் விமரிசித்தால் சொடலை பார்ட்னர் அமித்ஜி சொம்மா உட்டுடுவாரா. இங்குட்டு மவன், மறுமவன் பாக்கெட் செலவுக்கே வருஷத்துக்கு முப்பதாயிரம் கோடி ஓவா அடிக்குறாய்ங்கன்னு அவிங்க கனக்கப்புள்ளையே சொல்லியும் இன்னும் அங்கன அமலாக்கத்துறை போவல.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 03, 2025 14:11

எல்லா கட்சிகளுக்கும் வாரிக் கொடுத்து விட்டு பாஜ கட்சிக்கு மட்டும் வெறும் 100 கோடி ரூபாய் தந்தால் விட்டு விடுவார்களா? இ டி யை அனுப்புங்க... தட்டி தூக்குங்க...


RAJ
ஜன 03, 2025 13:12

மார்ட்டின்னா multilevel


Barakat Ali
ஜன 03, 2025 13:01

துக்ளக்காரின் மருமகனை உட்டுட்டேன் ....


சமீபத்திய செய்தி