உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் துவக்கம்

மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை வரும் ஜூன் 20ம் தேதி காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் இன்று(ஜூன் 17) நடைபெற்றது.மதுரை - பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஒசூர், வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய வந்தே பாரத் மூலம் திருச்சி பயணிகளும் விரைவாக பெங்களூரு செல்ல இயலும். மதுரை, பெங்களூருவுக்கு இடையே வர்த்தக, தொழில் தொடர்பு அதிகரிக்கும். இந்த ரயில் சேவையை வரும் ஜூன் 20ம் தேதி காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு கிளம்பிய ரயில், மதியம் 2 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு போதுமான ரயில்கள் இல்லாத நிலையில் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

tmranganathan
ஜூன் 18, 2024 07:14

எல்ல ஊரிலும் நின்று சென்றால் பஸ்சேன்ஜ்ர் ரயிலாக போய்விடும்.


M R Lakshiminarayanan
ஜூன் 17, 2024 17:59

நாமக்கல் ரயில் நிலையத்தில் இந்த வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


Bneutral
ஜூன் 17, 2024 13:12

these routes might be planned earlier nothing like expecting any vote from cheap tamilians who voted against BJP


Sathe Eswaran
ஜூன் 17, 2024 12:43

மத்தியில் அமையும் அரசு ஆனது அனைத்து மக்களுக்குமானது தன்னை தேர்ந்தெடுத்தவர்கள் தேர்ந்தெடுக்காதவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் அதுவும் எதிர்க்கட்சிகள் ஜெயித்த இடத்தில் அவர்களுக்கு நாம் செய்தால் தான் அடுத்த முறையாவது வர முடியும் என்று மத்திய அரசு செய்து வருகிறார்கள் அப்படியானால் சொந்த ஆளுங்கட்சி இருக்கிற எம்பிக்கள் இருக்கும் பகுதியில் மட்டும் தான் வளர்ச்சி திட்டங்கள் என்றால் எதிர்க்கட்சிகள் தேர்தலில் நிற்காமல் இருந்து விடலாமே மக்கள் தேர்ந்தெடுப்பது என்பது ஜனநாயக முறை மத்திய அரசு அமைந்துவிட்டால் அது அனைவருக்கும் மத்திய அரசுதான்


Sathe Eswaran
ஜூன் 17, 2024 12:40

தமிழக மக்களுக்கு தமிழகத்திற்கு உள்ளேயே இன்னும் எத்தனையோ ரயில்கள் விடலாம் கோவை திருச்செந்தூர், கோவை டு நாகப்பட்டினம் கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு இப்படி பல்வேறு ரயில்களை சாதாரண கட்டணத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வந்தே பாரத் என்பது அனைவரும் பயன்படுத்த முடியாத கட்டணத்தில் இருப்பதால் மத்திய அரசு ஆனது தமிழக மக்களுக்கு சாதாரண அதிவிரைவு வண்டிகளை இயக்க வேண்டும் மேலும் இந்த வந்தே பாரத் திரையில் ஆனது மதுரையிலிருந்து நேரடியாக திண்டுக்கல் கரூர் சேலம் வழியாக செல்லாமல் மதுரையிலிருந்து திண்டுக்கல் திருச்சி திருச்சியில் இருந்து கருவூர் வழியாக செல்வது என்பது பயணிகளுக்கு வீண் நேர விரையத்தை ஏற்படுத்துகிறது மத்திய அரசாங்கத்துக்கு மதுரை திருச்சி இரண்டுக்கும் சேர்த்து இயக்கப்படுவதாக தெரிகிறது அது ஒரு உரம் இந்த ஆளும் மதுரையில் இருந்து திண்டுக்கல் கரூர் வழியாக இயக்கினால் பயண நேரம் இன்னும் குறையலாம்


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 17, 2024 19:16

அன்பருக்கு திருச்சி மக்கள் பயன் பெறுவது பிடிக்கவில்லையா? திண்டுக்கல் கரூர் பாதை அதிவேகமாக செல்ல உகந்தது இல்லாமல் இருக்கலாம்.


Ramesh Sargam
ஜூன் 17, 2024 12:31

எவ்வளவு ரயில்கள் அறிமுகப்படுத்தினாலும், ஒரு அவசர பயணத்திற்கு எந்த ரயில்களிலும் டிக்கெட் கிடைப்பதில்லை சாமானியர்களுக்கு. அதே, ஒரு ஏஜென்ட் மூலம் முயன்றால் உடனே கிடைத்துவிடும். ரயில்வே புக்கிங் அதிகாரிகள் மற்றும் ஏஜென்ட்களிடையே உள்ள அந்த உறவு வெட்டப்படவேண்டும், சாமானியர்களுக்கும் டிக்கெட் கிடைக்கவேண்டுமென்றால்.


Bye Pass
ஜூன் 17, 2024 13:17

நீங்க வாட்ஸப்பில் வீடியோ மூலம் பேசி வீட்டிலேயே இருங்களேன் ..


Srinivasan Krishnamoorthi
ஜூன் 17, 2024 12:28

ரயில் விட்டதால் விரைவில் திமுக பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்குமா ?


Kumar Kumzi
ஜூன் 17, 2024 12:10

மோடி விரோதியும் இந்துமத ஜென்ம விரோதியான விடியாத விடியலுக்கு மோடியின் அன்பு பரிசு


Tiruchanur
ஜூன் 17, 2024 12:07

வழி சேலம் திருப்பத்தூர், பங்காரபேடே. ஹொசூர் வழி அல்ல


ganapathy
ஜூன் 17, 2024 11:46

தமிழக மக்கள் ஒரு எம்பி கூட கொடுக்காத நிலையிலும் காங்கிரஸ் போலல்லாமல் வெற்றிபெற்றவுடன் புதிய ரயில் வசதியை பாஜக மட்டுமே தென்தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்காக கொடுக்கும். காசுக்காகவும் பாதிரி முல்லாக்களின் முளையற்ற வார்த்தைக்காகவும் திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டவனுங்க சூடு சொரண மானம் வெட்கம் இருந்தா இதுல போக மாட்டனுங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை