உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தவ், சரத்பவாருடன் மம்தா சந்திப்பு

உத்தவ், சரத்பவாருடன் மம்தா சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகனின் திருமண நிகழ்வில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி பங்கேற்றார்.அதன்பின், 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் கட்சி தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மம்தா பானர்ஜி சந்தித்தார்.இந்த சந்திப்புக்குபின் செய்தியாளர்களிடம் மம்தா கூறுகையில், “பா.ஜ., தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிலையானது அல்ல; இந்த ஆட்சி தொடர்ந்து நீடிப்பது கடினம். எனவே, இந்த ஆட்சியின் ஐந்து ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்ய வாய்ப்பு இல்லை,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வங்காளம்
ஜூலை 13, 2024 07:43

அதெப்படி, அம்பானி அதானின்னு பார்லி ல கூச்சல் குழப்பம் போட வேண்டியது. இங்க புற வாசல் வழியா வந்து கும்மாளம் அடிக்க முடியும்.


Swami Nathan
ஜூலை 12, 2024 23:17

ஏன் சிங்கம் புலி கரடி போன்றவற்றையும் தெருவில் விட வேண்டியது தானே?


RAAJ68
ஜூலை 12, 2024 23:06

இதை சொல்வதற்கு தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை