மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
5 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
11 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
11 hour(s) ago | 2
ஜெய்ப்பூர், 'மொபைல் போன்' வாயிலாக மனைவிக்கு முத்தலாக் கூறிவிட்டு, பாகிஸ்தான் பெண்ணை மணந்த ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார்.ராஜஸ்தான் மாநிலம், சுரு பகுதியைச் சேர்ந்தவர் ரெஹ்மான். இவருக்கும், பரிதா பானோ, 29, என்பவருக்கும் 2011ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ரெஹ்மான் வேலை தேடி குவைத்துக்குச் சென்று, அங்கு போக்குவரத்து துறையில் பணிபுரிந்து வருகிறார். அவரது குடும்பம் ராஜஸ்தானின் ஹனுமன்கரில் வசித்து வருகிறது.ரெஹ்மானுக்கு சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளம் வாயிலாக மேஹ்விஷ் என்ற பாகிஸ்தான் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவரை திருமணம் செய்வதற்காக, தன் மனைவிக்கு மொபைல் போனில் ரெஹ்மான் முத்தலாக் கூறியுள்ளார். பின் மேஹ்விஷை சவுதி அரேபியாவில் திருமணம் செய்துள்ளார். கடந்த மாதம் சுற்றுலா விசாவில் மெஹ்விஷை இந்தியா அழைத்து வந்து, தன் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் குவைத் சென்றுவிட்டார். இதையறிந்த அவரது மனைவி பரிதா பானோ போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி மீண்டும் ஜெய்ப்பூர் திரும்பிய ரெஹ்மானை, விமான நிலையத்தில் பிடித்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், புகாரில் கூறியிருப்பது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
5 hour(s) ago | 2
11 hour(s) ago
11 hour(s) ago | 2