மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
3 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
3 hour(s) ago | 1
பெரவள்ளூர்:கொளத்துார், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் ராஜவேல், 35. இவர், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 9ம் தேதி 'இன்ஸ்டாகிராம்' வலை பக்கத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து, 'ரிலையன்ஸ் ஆப்' நிதி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். 10 லட்ச ரூபாய் வேண்டுமானால், அதற்கு ஜி.எஸ்.டி., தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 70,000 ரூபாய் முன்பணமாக கட்ட வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இதை நம்பிய ராஜவேல், 'ஜிபே' வாயிலாக 70,000 ரூபாய் கட்டியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி 10 லட்ச ரூபாய் கடன் தொகையை அனுப்பவில்லை.அப்போது தான், 'ரிலையன்ஸ் ஆப்' என்ற பெயரில் போலி 'ஆப்' வாயிலாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அவர் அளித்த புகாரின்படி, பெரவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனார்.
3 hour(s) ago
3 hour(s) ago | 1