உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் ஜூலை 15 வரை நீட்டிப்பு

மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் ஜூலை 15 வரை நீட்டிப்பு

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோர்ட் காவலை ஜூலை 15 வரை நீட்டித்து டில்லி கோர்ட் உத்தரவிட்டது.டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அவரது கோர்ட் காவல் நிறைவடைந்த நிலையில் இன்று (ஜூலை07) மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் அவரது கோர்ட் காவலை ஜூலை 15 வரை நீட்டித்து நீதிபதி காவேரிபவேஜா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஜூலை 07, 2024 04:02

விஞ்ஞானத்துக்கே விஞ்ஞானம் சொல்லிக்கொடுக்கும் வல்லமை ஆமாம் ஆத்மீகளுக்கு உண்டு. ஆக நீதித்துறை மட்டுமல்லாது அமலாக்கத்துறையும் கூட திணறுகிறது என்பது மட்டும் புரிகிறது. உலகிலேயே சாராயத்துக்கு மிகக்குறைவான வரி என்றால் அது டெல்லியில்த்தான். டெல்லியில் சைபீரியாவை விட குளிர் அதிகம் இருக்கும் போல தெரிகிறது.


K.n. Dhasarathan
ஜூலை 06, 2024 21:04

நீதி தள்ளாடுகிறது, ஒரு முடிவு எடுக்க முடியாமல் ஒரு வருடத்திற்கு மேல், மிகவும் பரிதாபம், ஆளும் கட்சியின் அழுத்தம், இல்லை என்று மறுக்க முடியுமா ?


Kasimani Baskaran
ஜூலை 07, 2024 03:58

குற்றவாளிக்கு கால் கழுவி விட வெட்கமில்லையா?


அப்புசாமி
ஜூலை 06, 2024 20:15

ஒரேயடியா ஒரு வருஷத்துக்கு காவலை நீட்டியுங்க. தொப்பை அதிகாரிகளால் அப்பவும்.ஒண்ணும் நிரூபிக்க முடியாது. பசி , கோல்ட் ஹேர், சிபு சோரன் ஆகியோரை விடுதலை.பண்ணிய மாதிரி இவரையும் விடுதலை பண்ணிருங்க. மீண்டும் அமைச்சராயிடுவாரு. சுபம்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி