உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேக்ஸ் முல்லர் பப்ளிக் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி

மேக்ஸ் முல்லர் பப்ளிக் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி

மஹாலட்சுமி லே - அவுட் : எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் பெங்களூரு மேக்ஸ் முல்லர் பப்ளிக் பள்ளியின் 99 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதுதொடர்பாக பள்ளி முதல்வர் ஹரி கூறியதாவது: நடந்த முடிந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், மேக்ஸ் முல்லர் பப்ளிக் பள்ளியில் 60 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், துருதி பூஜாரி, சம்பதா பட், ரோஹினி உமேஷ் ஷெட்டி, சின்மயி கவுடா, ருதுன் பாண்டியன் உட்பட 15 மாணவர்கள் 90 சதவீதத்துக்கு மேலும்; 6 மாணவர்கள் 85 சதவீதத்துக்கு மேல் பெற்றனர்.30 மாணவர்கள் முதல் வகுப்பும்; 7 மாணவர்கள் இரண்டாம் வகுப்பும்; ஒரு மாணவர் மூன்றாம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றனர். ஒரு மாணவர் வராததால், மொத்தம் 59 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது, 99 சதவீதம்.மாணவர்களின் சாதனைக்கு உதவிய பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை