உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் வினாத்தாள் கசிவு; மருத்துவ மாணவி கைது

நீட் வினாத்தாள் கசிவு; மருத்துவ மாணவி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஜார்க்கண்டைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லுாரி மாணவி ஒருவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட், கடந்த மே 5ம் தேதி நடந்தது. இதில், வினாத்தாள் லீக் ஆனது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், ஓ.எம்.ஆர்., எனப்படும் விடைத்தாளில் மோசடி என, பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

விசாரணை

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதுவரை பீஹார், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்த வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் உள்ள பெட்டியில் இருந்து, நீட் வினாத்தாளை திருடியதாக பங்கஜ் குமார் என்பவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் பீஹார் மாநிலம் பாட்னாவில் சமீபத்தில் கைது செய்தனர். அவருக்கு உதவியதாக ராஜு சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் நான்கு பேரை நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும், நான்கு நாட்கள் காவலில் எடுத்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

16 பேர்

சமூக வலைதளங்களில் 'சால்வர் கேங்' என்ற பெயரில் நீட் வினாத்தாள் கசிய விட்ட குழுவில் ஜார்க்கண்ட் ஹசாரிபாகில் உள்ள மருத்துவ கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி சுரபி குமாரி என்பவருக்கும் பங்கு உள்ளதை, சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டறிந்து நேற்று கைது செய்தனர். நீட் வினாதாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
ஜூலை 20, 2024 13:45

தமிழ்நாட்டில் இருந்து யாராவது ஒருவரை கைது செய்து விட்டு மொத்தப் பழியையும் தமிழர்கள் மீது போட்டு விட வேண்டியது தானே!


SRINIVASAN R
ஜூலை 20, 2024 12:26

இதில் ஜாதியை ஏன் நுழைக்கின்றீர்கள்? தவறுகள் செய்தவர்களை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்.


Sampath Kumar
ஜூலை 20, 2024 09:15

தொழிநுட்பத்தை பயன் படுத்தி இப்போவே ஒருத்தன் வினாத்தாள் தறிக ஐடியா கொடுக்கிறான் அவன் யாரு ஆரிய கும்பலை சேர்ந்தவன் தன சந்தேகம் வேண்டாம்


Pandi Muni
ஜூலை 20, 2024 10:09

எந்த வித சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவதில்லை, கஞ்சா குடிக்கி இல்லை, கொலைகாரன் இல்லை


karthik
ஜூலை 20, 2024 11:39

இதே போன்ற திருட்டுத்தனம் தான் நீட் வேண்டாம் என்று சொல்லிவிட்டு.. ஒவ்வொரு தனியார் மருத்துவ கல்லூரியும் தனித்தனியாக நாங்களே கேள்வி தாள் மற்றும் தேர்வு நடத்திக்கொள்கிறோம் என்று சொல்வது. பணம் அதிகமாக கொடுப்பவர்களுக்கு தாங்கள் தயாரித்த கேள்வித்தாளை முன்கூட்டியே கொடுத்துவிடுவார்கள் அவர்களும் படிப்பது போல படித்து பாஸ் ஆகிவிட்டேன் என்று வெளியில் காண்பித்து கல்லூரியில் இடம் கொடுத்துவிடுவார்கள்


கிருஷ்ணதாஸ்
ஜூலை 20, 2024 08:50

திருந்தவே மாட்டோம் என்று அடம் பிடிப்பவர்களுக்கான சபாஷ் தண்டனைகள்!


rsudarsan lic
ஜூலை 20, 2024 08:30

இந்த அறிவு ஜீவிகளை BSC படிப்புக்கு மாற்றிவிட்டால் போதும். சிறந்த தண்டனை


Kasimani Baskaran
ஜூலை 20, 2024 07:17

தேர்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஏற்கனவே உள்ள பல கேள்வித்தாள்களில் வெவ்வேறு கேள்விகளை தேர்வு செய்து ஒருங்கிணைத்து தேர்வு மையத்திலேயே பிரிண்ட் செய்து கொடுக்க வேண்டும்.


R K Raman
ஜூலை 20, 2024 17:53

நல்ல யோசனை ஆனால் லட்சக்கணக்கில் தேர்வாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மையங்கள். மிகவும் கடினமான விஷயம் ஆன்லைன் தேர்வு வைக்கலாம். ஒரே நாளில் இல்லாமல் சில நாட்கள் தொடர்ந்து வைக்க வேண்டும். கணிணியே கேள்விகளை தேர்ந்தெடுக்குமாறு... இப்போது கேல் சில பாடங்கள் அப்படியே நடக்கிறது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ