உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ வீரர்களுக்கு மனநல ஆலோசனை

ராணுவ வீரர்களுக்கு மனநல ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு மனநல மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதற்கான சிறப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் சார்பில் மனநல மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதற்காக, 'டெலிமானஸ்' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, 14416 என்ற சிறப்பு எண் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த தொலைபேசி எண்ணில் அழைத்து, மனநலம் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் பெற முடியும்.கடந்த 2022 அக்டோபரில் துவக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 51 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; 20 மொழிகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.நாளொன்றுக்கு, 3,500 அழைப்புகள் என, இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் இந்த தொலைபேசி இணைப்புக்கு வந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, ராணுவத்தினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருக்கு உதவும் வகையில், மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லுாரியில், இது போன்ற சிறப்பு மையம் நேற்று துவக்கப்பட்டுள்ளது.இதற்காக, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ராணுவ அமைச்சகத்துக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, புனேயில் துவக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் நேற்று வெளி யிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
ஜூன் 06, 2024 12:19

இதற்க்கு அதிலாக ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு முக்கிய பிரமுகர்கள் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளையும் கொடுக்கலாம், விடுமுறையில் வீரர்கள் அவர்களது சொந்த வீட்டுக்கு வந்தாலும் அவர்களை துன்புறுத்துவது , அவர்களது சொத்தை அபகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர்சட்டத்தில் போடுவது என்று மிக மிக உச்சகட்ட பாதுகாப்பு கொடுத்தாலே போதும் . நாம் வாழ தன் உயிரை பணயம் வைத்து வாழும் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் உரிய மரியாதையோடு கூடிய முன்னுரிமைக்யும் வழங்கினால் போதும், வந்தே மாதரம்


V RAMASWAMY
ஜூன் 06, 2024 09:20

இம்மாதிரி ஆலோசனைகளை ராணுவ வீரர்களுக்கு மட்டுமல்ல, தேர்தெடுக்கப்பட்ட எம் எல் ஏ, எம் பி முதல் அணைத்து மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கும் அளிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும்.


மேலும் செய்திகள்