உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூட்டி கிடக்கும் மெட்ரோ நிறுவன கடைகள்

பூட்டி கிடக்கும் மெட்ரோ நிறுவன கடைகள்

பெங்களூரு: ஓல்டு மெட்ராஸ் சாலையில், பெங்களூரு மெட்ரோ நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட கடைகள் பாழடைந்து கிடக்கின்றன.பெங்களூரு மெட்ரோ நிறுவனம், வருவாயை அதிகரிக்க பல வழிகளை கையாள்கிறது. ரயில்கள், நிலையங்களில் விளம்பரம் பொருத்த அனுமதி அளிப்பது, கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது என, பல திட்டங்களை செயல்படுத்துகிறது.அதேபோன்று ஓல்டு மெட்ராஸ் சாலையில், சுவாமி விவேகானந்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகில், கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, 31 கடைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் கட்டியது. இந்த கடைகளை வியாபாரிகளுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளது.வியாபாரம் இல்லாததால், வியாபாரிகள் கடைகளை காலி செய்துள்ளனர். நான்கைந்து கடைகளில் மட்டுமே, வியாபாரிகள் தொழில் நடத்துகின்றனர். மற்ற கடைகளுக்கு 'பூட்டு' போடப்பட்டுள்ளது.விவேகானந்த சுவாமி மெட்ரோ நிலையத்துக்கு, தினமும் லட்சக்கணக்கான பயணியர் வருகின்றனர். இதன் அருகில் கட்டப்பட்ட வர்த்தக கடைகளை ஏலம் மூலம், வாடகைக்கு பெற்ற வியாபாரிகள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள், அலங்கார பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்தனர்.நாளடைவில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது. நஷ்டம் ஏற்பட்டதால், கடைகளை காலி செய்தனர். தற்போது பெரும்பாலான கடைகள் பாழடைந்து கிடக்கின்றன.இதுகுறித்து, பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரி கூறியதாவது:தரமான கட்டடத்தில், கடைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது சில கடைகளில் மட்டுமே, வியாபாரம் நடக்கிறது. மற்ற கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள், சரியான வியாபாரம் இல்லையென, கடைகளை காலி செய்துஉள்ளனர்.கடைகளை பற்றி சரியாக பிரசாரம் செய்யாததே, இதற்கு காரணம். வர்த்தக கடைகள் இருப்பது குறித்து, விளம்பரம் செய்ய வேண்டிஉள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை