உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துமகூரு வரை மெட்ரோ? தனியார் நிறுவனம் ஆய்வு!

துமகூரு வரை மெட்ரோ? தனியார் நிறுவனம் ஆய்வு!

பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:நம்ம மெட்ரோ ரயில் இணைப்பை, பெங்களூரின் புறநகருக்கும் விஸ்தரிக்க, மெட்ரோ நிறுவனம் ஆலோசிக்கிறது.துமகூரு வரை விஸ்தரிப்பதன் சாத்தியங்கள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பொறுப்பை, ஹைதராபாதை சேர்ந்த, ஆர்.வி. அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் மற்றும் கன்சல்டன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஏற்றுள்ளது.அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில், மாதவராவில் இருந்து துமகூரு வரை 52.4 கி.மீ., வரை மெட்ரோ ரயில் இணைப்பை விஸ்தரிப்பது குறித்து, அந்நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். இதற்காக அந்நிறுவனத்துக்கு, 1.25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆர்.வி. அசோசியேட்ஸ் நிறுவனம், செல்லகட்டா - பிடதி, ஸ்கில் இன்ஸ்டிடியூட் - ஹாரோஹள்ளி, பொம்மசந்திரா - அத்திப்பள்ளி காரிடாரை ஆய்வு செய்யும்.அதே போன்று டில்லியை சேர்ந்த இன்ட்ரோசாப்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனம், கொட்டிகெரே - ஜிகனி, ஆனேக்கல் - அத்திப்பள்ளி, சர்ஜாபூர் - வர்த்துார், காடுகோடி ட்ரீ பார்க்கில் இருந்து, 60 கி.மீ., மெட்ரோ காரிடார் குறித்து ஆய்வு அறிக்கை தயாரிக்கிறது. அறிக்கை தாக்கல் செய்தபின், மாநில அரசும், மெட்ரோ நிறுவனமும், இறுதி முடிவு எடுக்கும்.பெங்களூரில் மெட்ரோ போக்குவரத்து இணைப்பை, 2031க்குள் 317 கி.மீ., அதிகரிக்க மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ