உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பால் விலை உயர்வு? கே.எம்.எப்., விளக்கம்!

பால் விலை உயர்வு? கே.எம்.எப்., விளக்கம்!

பெங்களூரு : கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு நந்தினி என்ற பெயரில் பாக்கெட் பால் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பால் விலையை, லிட்டருக்கு மூன்று ரூபாய் கே.எம்.எப்., உயர்த்தியது.இந்நிலையில், நாடு முழுதும் பால் கூட்டமைப்பு சங்கங்கள், பால் விலையை உயர்த்த தயாராகி வருகின்றன. குஜராத்தின் அமுல் பால், டில்லியின் மதர் டெய்ரி பால் விலை உயர்த்தப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் கர்நாடகாவில் மீண்டும் பால் விலை உயர்த்தப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது. மக்கள் பீதி அடைந்தனர்.கே.எம்.எப்., பொருட்களை சந்தைப்படுத்தல் அதிகாரி ரகுநந்தன் நேற்று கூறுகையில், ''நந்தினி பால் விலையை உயர்த்தும் முடிவு, கே.எம்.எப்.,பிடம் இல்லை,'' என்றார்.இதனால் மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ