உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கே.சி.ஜெனரல் மருத்துவமனை தரம் உயர்த்த அமைச்சர் உறுதி

கே.சி.ஜெனரல் மருத்துவமனை தரம் உயர்த்த அமைச்சர் உறுதி

பெங்களூரு: பெங்களூரு மக்களின் உயிர்நாடியான, மல்லேஸ்வரம் கே.சி.ஜெனரல் மருத்துவமனையை, 200 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்த, சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:பெங்களூரின், மல்லேஸ்வரம் கே.சி.ஜெனரல் மருத்துவமனையை தரம் உயர்த்த, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 200 கோடி ரூபாய் செலவில், மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.மேலும், 50 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை மையம் உட்பட மற்ற பணிகள், வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பது, அரசின் திட்டமாகும்.கே.சி.ஜெனரல் மருத்துவமனையில், 66 கோடி ரூபாய் செலவில், புதிதாக தாய், சேய் மருத்துவமனை கட்டப்படும். 38 கோடி ரூபாய் செலவில், மருத்துவ கல்வி போதனை பிரிவு கட்டடம் கட்டப்படும். 10 கோடி ரூபாய் செலவில், பழைய கட்டடம் புதுப்பிக்கப்படும். 4.80 கோடி ரூபாய் செலவில், தீயணைப்பு வசதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை