உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீட் கேட்பது தவறல்ல அமைச்சர் சதீஷ் கருத்து

சீட் கேட்பது தவறல்ல அமைச்சர் சதீஷ் கருத்து

ஹாவேரி: ''ஷிகாவி இடைத்தேர்தலுக்கு, நாங்கள் இப்போதிருந்தே தயாராகி வருகிறோம்,'' என பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.ஹாவேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஹாவேரியின், ஷிகாவி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு, நாங்கள் இப்போதிருந்தே தயாராகி வருகிறோம். பலர் சீட் எதிர்பார்க்கின்றனர். தகுதியான வேட்பாளருக்கு சீட் கிடைக்கும்.பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், லிங்காயத், முஸ்லிம் என, பல சமுதாயத்தினர் சீட் எதிர்பார்க்கின்றனர். வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளரை தேடி வருகிறோம்.இடைத்தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதம் கால அவகாசம் உள்ளது. எனவே, 'கட்சியை பலப்படுத்துங்கள், ஓட்டுகள் பிரியாமல் பார்த்து கொள்ளுங்கள்' என, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி நாங்கள் செயல்படுகிறோம்.ஷிகாவி தொகுதியில், யாருக்கு சீட் கொடுப்பது என, இன்னும் முடிவு செய்யவில்லை. இது பற்றி மேலிடம் முடிவு செய்யும். சீட் கேட்பது தவறு அல்ல. அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால் இறுதி முடிவு எடுப்பது முதல்வரும், துணை முதல்வரும், மேலிடமும்தான்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை