உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜினாமா செய்ய தயார்  ம.ஜ.த., -- எம்.எல்.ஏ., விரக்தி

ராஜினாமா செய்ய தயார்  ம.ஜ.த., -- எம்.எல்.ஏ., விரக்தி

யாத்கிர்: ''என் தொகுதியில் போலீஸ் துறையில் ஊழல் அதிகரித்து விட்டது. என் பேச்சை டி.எஸ்.பி., கேட்பதில்லை. இதனால் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்,'' என ம.ஜ.த., -- எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர் விரக்தியுடன் கூறியுள்ளார்.யாத்கிர், குர்மித்கல் தொகுதி ம.ஜ.த., -- எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர். இவர் நேற்று முன்தினம் மாலை குர்மித்கல்லில் நடந்த போலீஸ்- பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் சரணகவுடா கந்தகூர் பேசியதாவது:குர்மித்கல் தொகுதியில் போலீஸ் துறையில் ஊழல் அதிகரித்து விட்டது. எவ்வளவு பணம் வாங்க வேண்டும் என, 'ரேட் கார்டு' உருவாக்கி உள்ளனர். மணல் கடத்தல், சூதாட்டம் விளையாடுபவர்களிடம் இருந்து போலீசார் பணம் வாங்குகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கின்றனர். ஆனால் அதற்குரிய ரசீது கொடுப்பதில்லை. குர்மித்கல் போலீஸ் துறையில் நடக்கும் ஊழல் குறித்து, பலமுறை டி.எஸ்.பி., கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். ஆனால், ஊழல் செய்யும் போலீசார் மீது, அவர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனது பேச்சுக்கு மதிப்பும் கொடுப்பதில்லை. இதனால் நான் மனசோர்வு அடைந்துள்ளேன்.என் தொகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார், அதிகாரிகளின் நடத்தை எனக்கு விரக்தி ஏற்படுத்தியுள்ளது. இதனால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை