உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.ஜ.த.,வை விலக்க வேண்டும்! சிவராமே கவுடா வலியுறுத்தல்

ம.ஜ.த.,வை விலக்க வேண்டும்! சிவராமே கவுடா வலியுறுத்தல்

மாண்டியா : “ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ, சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பா.ஜ.,வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். எனவே கூட்டணியில் இருந்து ம.ஜ.த.,வை விலக்க வேண்டும்,” என, பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா வலியுறுத்தினார்.மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது: ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ குறித்து, பெரும் சர்ச்சை நடக்கிறது. இது லோக்சபா தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே ம.ஜ.த.,வை கூட்டணியில் இருந்து, பா.ஜ., விலக்கி வைக்க வேண்டும்.இந்த வழக்கு, பா.ஜ.,வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து, மாநில தலைவர்களை பா.ஜ., மேலிடம் எச்சரித்துள்ளது.எந்த விஷயம் என்றாலும், குமாரசாமி திடீரென போராட்டத்தில் குதிப்பார். ஆனால் பிரஜ்வல் விஷயத்தில், வேறு கட்சியை விமர்சிக்கிறார். பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களின் உதவிக்கு, குமாரசாமி செல்ல வேண்டும்.நாகமங்களாவின், கங்காதரசாமி கொலை வழக்கில், என் பங்கு எதுவும் இல்லை. ஆனால் என்னை கைது செய்யும்படி தேவகவுடா போராட்டம் நடத்தினார். நீதிமன்றம் எனக்கு 'கிளீன் சிட்' கொடுத்தது. ம.ஜ.த.,வில் என்னை போன்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ