உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாண்டியா நகராட்சியை கைப்பற்றியது ம.ஜ.த.,; தோல்வியடைந்த சிவகுமாரின் வியூகம்

மாண்டியா நகராட்சியை கைப்பற்றியது ம.ஜ.த.,; தோல்வியடைந்த சிவகுமாரின் வியூகம்

மாண்டியா: மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, கவுரவ பிரச்னையாக கருதிய மாண்டியா நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் ம.ஜ.த., வெற்றி பெற்றது.மாண்டியா நகராட்சி 35 கவுன்சிலர்கள் பலம் கொண்டது. ம.ஜ.த., 18 கவுன்சிலர்கள், பா.ஜ., 2, காங்கிரஸ் 10 கவுன்சிலர்களை வைத்துள்ளன. ஐந்து சுயேச்சை கவுன்சிலர்கள் உள்ளனர்.நகராட்சியின் முதல் ஆண்டில், ம.ஜ.த.,வினர் தலைவர், துணைத் தலைவர் பதவியை வகித்தனர். அவர்களின் பதவிக் காலம் முடிந்ததால், புதிய தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தல், காங்கிரஸ், ம.ஜ.த.,வுக்கு கவுரவ பிரச்னையாக இருந்தது.ம.ஜ.த.,வின் கோட்டையான மாண்டியா நகராட்சியை கைப்பற்ற, துணை முதல்வர் சிவகுமார் மிகுந்த ஆர்வம் காண்பித்தார். ம.ஜ.த., கவுன்சிலர்களை காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டுப் போட வைக்க முயற்சித்தார்.இதை உணர்ந்த ம.ஜ.த., சில நாட்களுக்கு முன்பே, அதிகாரப்பூர்வமாக கொறடா உத்தரவு பிறப்பித்து, நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில், கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டும் என, உத்தரவிட்டது.மாண்டியா நகராட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று காலை ஓட்டுப்பதிவு நடந்தது. ம.ஜ.த.,வின் 15 கவுன்சிலர்கள், பா.ஜ.,வின் இருவர், காங்கிரசின் ஒருவர், மாண்டியா எம்.பி., குமாரசாமி என, ம.ஜ.த.,வுக்கு மொத்தம் 19 ஓட்டுகள் வந்தன.காங்கிரசின் ஒன்பது கவுன்சிலர்கள், சுயேச்சையின் ஐவர், ம.ஜ.த.,வின் மூவர், மண்டியா எம்.எல்.ஏ., கானிகா ரவி என, காங்கிரசுக்கு 18 ஓட்டுகள் விழுந்தன. இதன்படி, ம.ஜ.த.,வின் நாகேஷ் நகராட்சித் தலைவராகவும், பா.ஜ.,வின் அருண்குமார் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காங்கிரசின் முயற்சி பலனளிக்கவில்லை.மத்திய அமைச்சர் குமாரசாமி அளித்த பேட்டி:குறுக்கு வழியில் ம.ஜ.த., வெற்றி பெற்றதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., கானிகா ரவி குற்றஞ்சாட்டுகிறார். இவரை பொறுத்தவரை குறுக்குவழி என்றால் என்ன? இவர் ஓட்டுப்பதிவு நடந்தபோது, கண்களால், சைகை மூலமாக, கவுன்சிலர்களுக்கு பணத்தாசை காண்பித்தார்.என் வாழ்க்கையில், முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட வந்துள்ளேன். 20 நாட்களாக நடந்த அரசியல் நிலவரங்களை கவனித்து, நான் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதை விட்டு, பிரதமரிடம் அனுமதி பெற்று ஓட்டுப் போட வந்தேன். தோல்வி பயத்தால் தேர்தலை தள்ளிவைப்பதில், காங்கிரஸ் கைதேர்ந்தது.இவ்வாறு அவர் கூறினார்.மாண்டியா நகராட்சித் தலைவர் தேர்தலை, மாவட்ட பொறுப்பு அமைச்சர் கவுரவ பிரச்னையாக கருதினார். அவரது சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எங்கள் கட்சி கவுன்சிலர்கள், காங்கிரசின் ஆசை வார்த்தைகளுக்கு பணியவில்லை. அரசியல் என்றால் ஆசை வார்த்தைகள் காண்பிப்பது சகஜம்தான். வரும் நாட்களில் மற்ற தேர்தல்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.நிகில்,இளைஞரணி தலைவர், ம.ஜ.த.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை