உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாக்குதல் வழக்கில்  எம்.எல்.ஏ.,வின் சகோதரர் கைது 

தாக்குதல் வழக்கில்  எம்.எல்.ஏ.,வின் சகோதரர் கைது 

பீதர், : கல்வி நிறுவனம் செயல்பாடு குறித்து கேள்வி கேட்டவரை தாக்கிய வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., சித்தலிங்கப்பா பாட்டீல் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.பீதர் ஹும்னாபாத் தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., சித்தலிங்கப்பா பாட்டீல். இவரது சகோதரர்கள் சுனில் பாட்டீல், சந்தோஷ் பாட்டீல். இவர்கள் இருவரும், கல்வி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.இந்த நிறுவனத்தில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பசவராஜ் என்பவர், சுனில், சந்தோஷிடம் கேள்வி எழுப்பினார். இதனால் பசவராஜை, கடந்த 18 ம் தேதி இருவரும் தாக்கினர். ஹும்னாபாத் போலீசில், இருவர் மீதும் வழக்கு பதிவாகி இருந்தது. இருவரும் தலைமறைவாகினர்.இந்நிலையில் மஹாராஷ்டிராவின் திரிம்பகேஸ்வரில், நேற்று முன்தினம் இரவு, சுனில் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை