உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீனாவை எதிர்கொள்ள நவீன பீரங்கி

சீனாவை எதிர்கொள்ள நவீன பீரங்கி

புதுடில்லி,உயரமான மலை பிராந்தியங்களில், சீனாவின் சவாலை முறியடிக்கும் வகையில், 'ஜோர்வார்' என்ற இலகு ரக போர் பீரங்கியை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வெறும் இரண்டே ஆண்டுகளில், குஜராத்தின் ஹசிரா பகுதியில் உள்ள 'எல் அண்டு டி' ஆலையில் இந்த பீரங்கியை, டி.ஆர்.டி.ஓ., மற்றும் 'எல் அண்டு டி' நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிஉள்ளன. ரஷ்யா - உக்ரைன் போரில் நடக்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, மலைப்பகுதிகள் மற்றும் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் வேகமாகச் செயல்படும்படி இந்த பீரங்கி தயாரிக்கப்பட்டு உள்ளது; இதன் எடை 25 டன். முதற்கட்டமாக 59 பீரங்கிகள் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படுவதாகவும், இரண்டாம் கட்டமாக 295 பீரங்கிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்த சோதனைகள் முடிவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V RAMASWAMY
ஜூலை 09, 2024 20:15

பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம்.


RajK
ஜூலை 09, 2024 16:59

செய்தியின் தலைப்பை படித்தவுடன் எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்தார்களோ என்று தான் தோன்றியது. செய்தியை முழுமையாக படித்தவுடன் தான் தெரிந்தது இது L


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 09, 2024 11:40

நவீன பீரங்கிகள், போர் விமானங்கள், ராடார்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் ஒத்திகை... இந்தியா ஒண்டிக்கு ஒண்டி சீனாவையும், பாகிஸ்தானையும் ஒருசேர சமாளிக்கிற அளவுக்கு வளர்ந்துக்கிட்டு இருக்கு.. இதை நினைச்சா எங்களுக்கு கடும் எரிச்சலா இருக்கு...இப்படிக்கு டீம்கா , காங்கிரஸ் கொத்தடிமைஸ் ....


Mohan
ஜூலை 09, 2024 10:11

வாழ்த்துக்கள் ...ஆனால் இது பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட வேண்டியிருக்கு அப்டியே போர் களத்தில் உபயோக படுத்த முடியாது ..அதுக்கு இன்னும் மூன்று வருடங்கள் ஆகும் அதன் பிறகே நாம் இதை கூறி இருக்க வேண்டும் ...


Kasimani Baskaran
ஜூலை 09, 2024 05:40

இதற்காகவே அம்பானிக்கு பாரத இரத்தினா விருது கொடுக்கலாம். நாட்டுக்காக எப்பேர்ப்பட்ட ஒரு சேவையை வழங்குகிறார்கள். தமிழகத்துக்கு கிடைத்தது சீனக்கொடியை ராக்கெட்டில் போட்டு இன்புறுகிறது. சீனாவிடம் வின்சி போல தனியாக ஒப்பந்தம் போடாத குறை ஒன்றுதான்...


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ