உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி அசத்தல்! :75 நாட்களில், 200 கூட்டங்கள், 80 பேட்டிகள்: லோக்சபா தேர்தலுக்காக மாரத்தான் பிரசாரம்

மோடி அசத்தல்! :75 நாட்களில், 200 கூட்டங்கள், 80 பேட்டிகள்: லோக்சபா தேர்தலுக்காக மாரத்தான் பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி, தன் 75 நாள் தொடர் தேர்தல் பிரசாரத்தை, பஞ்சாபின் ஹோஷியார்புரில் நேற்று நிறைவு செய்தார். மார்ச் 16ல் பிரசாரத்தை துவக்கிய அவர், 200 பொதுக்கூட்டங்கள், 80 பேட்டிகள் அளித்து அசத்தி உள்ளார்.உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான தற்போதைய லோக்சபா தேர்தலுக்கான கடைசி கட்ட ஓட்டுப் பதிவு நாளை நடக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fewcawpk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாபின் ஹோஷியார்புர் லோக்சபா தொகுதியில், தன் பிரசாரத்தை நேற்று நிறைவு செய்தார். மார்ச் 16ம் தேதி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து பிரசாரத்தை துவக்கிய பிரதமர் மோடி, 75 நாட்கள் தொடர்ந்து மாரத்தான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

விமர்சனம்

கடந்த 75 நாட்களில், நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து 200 பொதுக் கூட்டங்கள், சாலைப் பேரணிகளில் பங்கேற்றார். முதன்மையான நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், 'டிவி சேனல்'கள் உட்பட 80க்கும் அதிகமான பேட்டிகளை அளித்துள்ளார்.உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் பிரதமர் பங்கேற்றுள்ளார்.காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்ற பிரதமரின் விமர்சனம், இந்த தேர்தலில் பேசு பொருளானது.குடியுரிமை திருத்த சட்டம், அயோத்தி ராமர் கோவில், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்டவை பா.ஜ., அரசின் சாதனைகளாக முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் நிறைவின் போதும், பயணம் மேற்கொள்வது பிரதமரின் வழக்கம். கடந்த 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்ததும், மஹாராஷ்டிராவின் சத்தாரா மாவட்டத்தில் உள்ள பிரதாப்காட் மலைக்கோட்டைக்கு பிரதமர் சென்றார். 1659, நவ., 10ல் நடந்த போரில், பிஜாபூர் சமஸ்தானத்தை ஆண்ட சுல்தான் அப்சல் கானை, மராத்திய மன்னர் மாவீரர் சிவாஜி தோற்கடித்தார்.

தியானம்

அந்த கோட்டையில் சில தினங்கள் பிரதமர் தங்கியிருந்தார். 2019 தேர்தல் பிரசாரம் முடிவடைந்ததும், உத்தரகண்டின் கேதார்நாத்தில் உள்ள குகையில் தியானத்தில் ஈடுபட்டார்.இந்த முறை, தமிழகத்தின் கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள விவேகானந்தா பாறையில் தியானத்தில் ஈடுபட்டு உள்ளார். நேற்று மாலை துவங்கிய பிரதமரின் தியானம், நாளை மாலையுடன் நிறைவடைகிறது.

'இண்டியா' கூட்டணி மீது மோடி பாய்ச்சல்

பஞ்சாபின் ஹோஷியார்புர் லோக்சபா தொகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றிவிடும் என, இண்டியா கூட்டணியினர் கூக்குரல் எழுப்புகின்றனர். நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தியபோது, 1984 கலவரத்தில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அரசியலமைப்பின் குரல்வளையை நெரித்தது யார்? எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் பாதுகாத்து வருகிறோம். இண்டியா கூட்டணியினரின் இடஒதுக்கீட்டு கொள்கை மிகவும் ஆபத்தானது. அவர்கள் அரசியலமைப்பின் ஆன்மாவையும், அம்பேத்கரின் உணர்வுகளையும் அவமானப்படுத்துகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Velan Iyengaar
மே 31, 2024 11:58

80 என்னா 800 பேட்டி கூட கொடுக்கலாம்


Velan Iyengaar
மே 31, 2024 09:40

ஆனால் ராகுலுடன் ஒரே மேடை விவாதத்துக்கு மட்டும் எஸ் ஆகிடுவாரு


venugopal s
மே 31, 2024 09:02

ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர் தான்!


Sampath Kumar
மே 31, 2024 08:35

பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க


Velan Iyengaar
மே 31, 2024 07:41

அடேங்கப்பா ...


Sivabalan
மே 31, 2024 06:31

ஹி ஹி ஹி ஹி .........................


Kasimani Baskaran
மே 31, 2024 05:34

80 பத்திரிக்கைகளுக்கு பேட்டி. ஆனால் சிலர் மோடியால் பத்திரிக்கையாளர்களை எதிர்கொள்ள முடியாது என்று உருட்டினார்கள்? உபிஸ் அப்படித்தான் உருட்டுவார்கள்...


Velan Iyengaar
மே 31, 2024 09:37

ஒரு பொது பத்திரிகையாளர் சந்திப்பை மட்டும் செய்ய சொல்லி அவர் பெயரை காப்பாற்றிக்கொள்ளுங்களேன் ??


Balasubramanian
மே 31, 2024 05:24

அதற்கு மேல் முப்பத்து ஆறு மணி நேரம் தியானம் ஒரு பத்து நாட்கள் பிரசாரம் செய்து விட்டு ஒரு வாரம் மலைப் பிரதேசம் இல்லை வெளி நாடு என்று குடும்பத்துடன் ஓய்வெடுக்க செல்பவர்கள் யோசிக்க வேண்டிய விஷயம்!


முருகன்
மே 31, 2024 07:37

குடும்பம் என்ற ஒன்று இருந்தால் தானே மக்கள் படும் கஷ்டம் தெரியும்


Priyan Vadanad
மே 31, 2024 01:01

எழுபதை கடந்த உடல் பலமும் மனபலமும் கொண்ட இவர் நிச்சயமாக இளைஞர்தான்.. இவரது கடும் உழைப்பு கண்டிப்பாக பலன் கொடுக்கும்./ இவரே அடுத்ததாகவும் பிரதமர்./


hari
மே 31, 2024 07:44

நீ வடைய மாத்தி மாத்தி சுடு.... இன்னைக்கு 200 ரூபாய் வரலையா......


மேலும் செய்திகள்