உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா மாநில முதல்வராக மோகன் மஜி பதவியேற்பு

ஒடிசா மாநில முதல்வராக மோகன் மஜி பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசா மாநில முதல்வராக மோகன் மஜி பதவியேற்றார். விழாவில், பிரதமர் மோடி , உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஒடிசாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. இன்று (ஜூன் 12) புவனேஸ்வரில் நடந்த விழாவில், ஒடிசா மாநில முதல்வராக மோகன் மஜி பதவியேற்றார். துணை முதல்வர்களாக பிரவதி பரிதா மற்றும் கே.வி.சிங் தியோ பதவியேற்றனர். இவர்களுக்கு அம்மாநில கவர்னர் ரகுபர் தாஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dfgta264&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=013 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த 25 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் தான் முதல்வராக பதவி வகித்தார். 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
ஜூன் 12, 2024 20:33

ஒரிசாவில் பாஜக அரசு அமைக்க பங்கேற்ற ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அவர் எப்போதுமே பாஜகவிற்கு உதவிதான்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை