உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரசவத்தில் தாய், குழந்தை பலி

பிரசவத்தில் தாய், குழந்தை பலி

மூணாறு:இடுக்கி மாவட்டம், சாந்தாம்பாறை அருகே டாக்டரான தாயாரும், குழந்தையும் பிரசவத்திற்குப்பின் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.சாந்தாம்பாறை அருகே பாறைதோடு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் வீரகிஷோர். இவரது மனைவி டாக்டர் விஜயலெட்சுமி 29, உடும்பன்சோலை குடும்ப சுகாதார மையத்தில் பணியாற்றினார்.நிறைமாத கர்ப்பிணியான விஜயலெட்சுமியை பிரசவத்திற்காக நெடுங்கண்டம் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மூலம் நடந்த பிரசவத்தில் குழந்தை இறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு விஜயலெட்சுமியின் உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டது. அவரை, தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்தார். அதிக ரத்த போக்கு ஏற்பட்டு விஜயலெட்சுமி இறந்ததாக சுகாதாரதுறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

shakti
மார் 06, 2025 22:47

பொதுமக்களுக்கு கொடுக்க அரசாங்கம் கொடுத்த தரக்குறைவான மருந்துகளை டாக்டருக்கே கொடுத்துட்டாங்க போல ...


Natchimuthu Chithiraisamy
மார் 06, 2025 12:01

எப்படி சாப்பிடணும் எப்படி தூங்கணும் என்று சொல்லும் டாக்டர் இறந்துவிட்டார் என்கிற செய்தி மாதமாக இருக்கும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது நல்ல உணவு நல்ல மருந்து வாழவைக்கும். போலி உணவு போலி மருந்து சாகவைக்கும் என்கிற செய்தியை மக்களுக்கு சொல்லுகிறது


புதிய வீடியோ