உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குங்கள்; பிரதமரிடம் எம்.பி., மஞ்சுநாத் கோரிக்கை

மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குங்கள்; பிரதமரிடம் எம்.பி., மஞ்சுநாத் கோரிக்கை

ராம்நகர்: ''மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குங்கள் என்று, பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் கோரிக்கை வைத்து உள்ளேன்,'' என, பெங்களூரு ரூரல் பா.ஜ., - எம்.பி., மஞ்சுநாத் கூறி உள்ளார்.ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மேகதாது திட்டத்தை செயல்படுத்தினால் பெங்களூரு, ராம்நகரின் குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியும். இதனால் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் கோரிக்கை விடுத்து உள்ளேன். தேவகவுடாவும் மாநிலத்தின் நீர்பாசன திட்டங்கள் குறித்து, ராஜ்யசபாவில் பேசி கவனத்தை ஈர்த்து உள்ளார். அரசியல் வேறுபாடுகள் இருப்பினும், அனைவரும் ஒருங்கிணைந்து மாநிலத்தின் பிரச்னைகளை தீர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.மத்திய பட்ஜெட்டில் சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் நேரடி உதவிதொகை கிடைக்கிறது. தினை, அரிசி உட்பட 23 விவசாய பொருட்களுக்கு ஆதரவு நிலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ரயில்வே திட்டங்களுக்காக நமது மாநிலத்திற்கு 835 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இப்போது 7,564 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னப்பட்டணா, ராம்நகர் ரயில் நிலையங்களை மேம்படுத்த தலா 51 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது.பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையை பாதசாரிகள் கடக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பது, வாகன ஓட்டிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தருவது உட்பட பல விஷயங்கள் குறித்து, மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரியிடம் பேசி உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ