உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூடா முன்னாள் கமிஷனர்  தினேஷ்குமார் சஸ்பெண்ட் 

மூடா முன்னாள் கமிஷனர்  தினேஷ்குமார் சஸ்பெண்ட் 

ஹாவேரி : பல்கலைக்கழக பதிவாளர் பதவியில் இருந்து, 'மூடா' முன்னாள் கமிஷனர் தினேஷ்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.மைசூரில் உள்ள 'மூடா' எனும் மைசூரு நகர்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையிலான குழு விசாரிக்கிறது. மூடா கமிஷனராக இருந்த கே.ஏ.எஸ்., அதிகாரி தினேஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.கடந்த மாதம் 30ம் தேதி, ஹாவேரி பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மூடா முறைகேட்டில் தொடர்புடையவருக்கு, பல்கலைக்கழக பதிவாளர் பதவியா என்றும் கேள்வி எழுப்பின.மூடா முறைகேடு தொடர்பாக, தினேஷ்குமார் மீது லோக் ஆயுக்தாவில், பா.ஜ., - எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா புகாரும் அளித்தார். பல்கலைக்கழக பதிவாளர் பதவியில் இருந்து கொண்டே, மூடா வழக்கு சாட்சிகளை அழிக்க தினேஷ்குமார் முயற்சிப்பார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தினேஷ்குமாரை, பல்கலைக்கழக பதிவாளர் பதவியில் இருந்து, சஸ்பெண்ட் செய்து அரசு நேற்றுஉத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை