உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிஜாபுக்கு தடை விதித்த கல்லுாரி : தலையிட மும்பை ஐகோர்ட் மறுப்பு

ஹிஜாபுக்கு தடை விதித்த கல்லுாரி : தலையிட மும்பை ஐகோர்ட் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஹிஜாப், புர்கா உள்ளிட்டவற்றுக்கு தடை விதித்து உத்தரவிட்ட கல்லுாரி நிர்வாகத்தின் முடிவில் தலையிட, மும்பை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.மஹாராஷ்டிராவின் மும்பையில், செம்பூர் டிராம்பே கல்விச் சங்கத்தின், என்.ஜி.ஆச்சார்யா மற்றும் டி.கே.மராத்தே கல்லுாரி இயங்கி வருகிறது.ஹிஜாப், புர்கா, நகாப், தொப்பி உள்ளிட்டவற்றை மாணவர்கள் அணியக் கூடாது என்றும், ஆடைக் கட்டுப்பாட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, கல்லுாரி நிர்வாகம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அந்த கல்லுாரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒன்பது மாணவியர், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'கல்லுாரி நிர்வாகத்தின் உத்தரவு, மாணவியரின் மதத்தை கடைப்பிடிப்பதற்கான அடிப்படை உரிமை, தனியுரிமைக்கு எதிரானது. 'ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் இன்றியமையாத அங்கம். கல்லுாரி நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார்.கல்லுாரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கல்லுாரியில் ஹிஜாப், புர்கா போன்றவற்றை தடை செய்வதற்கான முடிவு, ஆடைக் குறியீட்டிற்கான ஒரு ஒழுங்கு நடவடிக்கை.இது, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானது அல்ல. அனைத்து மதம் மற்றும் ஜாதியைச் சேர்ந்த மாணவர் களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு உள்ளது' என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு, 'கல்லுாரி நிர்வாகம் எடுத்த முடிவில் தலையிட முடியாது' என, தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

CHANDRASEKAR k r
ஜூன் 27, 2024 11:56

தமிழ் படிக்க தெரிந்தவர்களை உபயோகிக்கலாம். கல்லூரி என்பதற்கு பதில் கல்வாரி என்று வாசிக்கிறார்.


பேசும் தமிழன்
ஜூன் 27, 2024 09:05

ஏண்டா.... பள்ளிக்கு போனால் படிக்கிற வேலையை மட்டும் பாருங்கள்.... அங்கே மத அடையாளம் எதற்க்கு ???


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 26, 2024 23:36

இந்த கத்திக்கு பயந்து மதம் மாறிய மூளை சலவை செய்யப்பட்ட அறிவாளிகளின் தொல்லை தாங்க முடியவில்லை, நபிகளின் நேரடி வாரிசுகளின் பெண்கள் ஹிஜாப் அணியாத புகைப்படங்கள் பலவற்றை பார்த்திருக்கிறேன். இந்த மூடநம்பிக்கைகளை பற்றி , ஈரோடு வெங்காயத்தின் அடிமைகள் பேசமாட்டார்கள்.


விஜய்
ஜூன் 26, 2024 23:33

super


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 22:51

இஸ்லாமிய நாடுகளிலேயே செல்வாக்கிழந்தது ஹிஜாப் அணியும் பழக்கம்... பல இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணியாமல் சினிமாவில் நடிக்கிறார்கள் ....


Ranjith
ஜூன் 26, 2024 22:15

ஒரு மதம் சார்ந்த வெளிப்பாடு கல்லூரியில் கூடாது என்றால் எல்லோருக்கும் அந்த கட்டுப்பாடு வைக்கப்பட வேண்டும் .


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 22:20

செய்தியை சரியாகப் படிக்கவில்லையா ??


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 22:53

ஹிஜாப் அணிவதால் அடையாளம் காண்பது சிரமம் .... மூளைக்கு இது புரியாது .....


ஆரூர் ரங்
ஜூன் 26, 2024 21:57

இஸ்லாத்தில் காலேஜ் போய் படிக்க வேண்டும் என்று கூட கூறப்பட்டlவில்லை. அரபு நாட்டில் உருவாகியது என்றாலும் பெட்ரோல் வண்டியில் பயணிக்க கூறப்படவில்லை. அப்புறம் குர்ஆனில் கூறப்படாத செயல்களை செய்கிறீர்களே. நபி (ஸல்) அவர்களின் நேரடி வாரிசுகளான ஜோர்தான் மன்னர் குடும்பத்திலேயே யாரும் புர்கா பர்தா ஹிஜாப் அணிவதில்லை.


Kundalakesi
ஜூன் 26, 2024 22:36

தலையை வெட்டும் குரூர கும்பலிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை