உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., தொண்டர்களுக்கு எனது "சல்யூட்": சொல்கிறார் பிரியங்கா

காங்., தொண்டர்களுக்கு எனது "சல்யூட்": சொல்கிறார் பிரியங்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'உ.பி மாநிலத்தில் அதிக வெற்றிகளுக்காக உழைத்த காங்கிரசின் தொண்டர்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். நான் அவர்களை பாராட்டுகிறேன்' என அக்கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரியங்கா எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றைய அரசியலில் பழைய லட்சியங்கள் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளை சரி செய்வதே முதன்மையானது. தேர்தல் என்பது மக்களுக்கானது. மக்கள் மட்டுமே போராடுகிறார்கள். மக்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். உத்தர பிரதேச மாநில காங்கிரசின் தொண்டர்கள் அனைவருக்கும் எனது 'சல்யூட்'. நீங்கள் வெயிலும், மழையிலும் உழைத்ததை நான் பார்த்தேன். கடினமாக உழைத்து அதிக வெற்றியை தேடி தந்துள்ளீர்கள். காங்கிரஸ் தொண்டர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் பயப்படவில்லை. நமது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். மக்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anand
ஜூன் 06, 2024 15:39

அடுத்த தேர்தல் வரை தாக்கு பிடிக்கவேண்டும் அல்லவா, அதற்கு தான் இந்த சல்யூட் எல்லாம்.


Sridharan Venkatraman
ஜூன் 06, 2024 14:57

இப்ப ஈ வீ எம் மெஷினில் கோளாறு இல்லை.


Syed ghouse basha
ஜூன் 06, 2024 14:35

தேர்தல்கமிஷன் அதிகார துஷ் பியோகம் பணபலம் ஆட்சி அதிகார பலம் தொலைகாட்சிகள் துஷ்பிரயோகம் காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் பொய்பிரச்சாரம் பத்திரிக்கை பலம் பூத்கைப்பற்றுதல் இவை அனைத்தையும் எதிர்த்து இந்தியா கூட்ணியை ஒன்றினைத்து ராகுலும் பிரியங்கவும் உழைத்த உழைப்பிற்கு பாரத் ஜோடோ வுக்கு ஆதரவாக கிடைத்த வெற்றி வாக்களித் இந்தியமக்களுக்கு நன்றி வெற்றி பெற்ற இந்திய கூட்டணிக்கு வாழ்த்துகள் ராகுல் பிரியங்காவுக்கு பாராட்டுகள்


kumarkv
ஜூன் 06, 2024 12:50

பல்டி கூட அடிக்கலாம்


Lion Drsekar
ஜூன் 06, 2024 12:22

வாழ்த்துக்கள், தற்போது இவரது அண்ணன் போட்டியிட்ட மற்றொரு தொகுதியில் இவர் போட்டியிடுவார். அதாவது தொண்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் இவரை கட்டாயப்படுத்தி தேர்தலில் நிற்கவைத்திப்பார்கள். பார்க்கத்தான் போகிறோம் . அப்போதுதான் குடியாட்சி மாமான்னர்களின் குடும்பம் தழைக்கும் . வந்தே மாதரம்


Ramesh Sargam
ஜூன் 06, 2024 12:12

வெறும் "சல்யூட்" தான். வேறென்றும் கிடைக்காது. கொடுக்கவும் மாட்டார்கள்.


SUBBU,MADURAI
ஜூன் 06, 2024 12:09

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை பாராட்டுவதை விட அகிலேஷ் கட்சியினரான சமஜ்வாதி கட்சியின் தொண்டர்களைத்தான் பிரியங்கா பாராட்ட வேண்டும் ஏனென்றால் அங்கு நடந்த தேர்தலில் திறம்பட உழைத்தவர்கள் சமஜ்வாதி கட்சியினரே தவிர காங்கிரஸ் கட்சியினர் அல்ல!


ram
ஜூன் 06, 2024 12:04

சிறுபான்மை முஸ்லீம் அண்ட் CHRISTIANS மக்களுக்கு SALUTE என்று சொல்லியிருப்பர்


vijai
ஜூன் 06, 2024 11:57

சல்யூட் அடிச்சிட்டு அப்படியே இத்தாலி போயிடு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை